உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இந்திரா காங்கிரசின் முற்போக்குத் திட்டங்களை நாம் ஆதரித்து-அவரோடு அணி திரண்டிருந்த திரண்டிருந்த நேரத்தில், இந்திரா காந்தியை எதிர்த்து, எதிர் அணியில் நின்ற பேர்வழி இன்றைக்கு இந்தத் தீர்மானத்தை எழுதி, 'கழக அரசு, முற் போக்குத் திட்டங்களுக்கு எதிரிடையானது' என்று பேசுகின்ற சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கிறது! கொந்தளிப்புச் சூழ்நிலை அவசியமா? முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்ற சனநாயக முறைகள் போதாவா? இந்த முறைகளெல்லாம் தேவை தானா? இன்றைக்குச் சிறைச்சாலையில் இருக்கின்ற எந்தத் தலைவர் இந்தத் திட்டங்களை எதிர்க்கிறார்? "தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற திட்டங் கள், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் நிறைவேற்றப் பட வேண்டும்" என்கின்ற ஆசை, இந்திரா காந்தி அம்மை யாருக்கு இருப்பது போல் எங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது! இவைகளையெல்லாம் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையிலே தான் நிறைவேற்ற வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலைமை இருக்கப் போகிறது? ஒரு வாரமா-ஒரு மாதமா-ஓராண்டுக் காலமா- அல்லது நீண்ட காலமா-புரியவில்லை? எங்கள் நிலை என்னவோ-புரியவில்லை! அதற்காக நாங்கள் திகைக்கவில்லை - வருத்தப்பட வில்லை! இன்றைக்கே ஒத்திகை பார்ப்பதைப் போலத்தான், நம் முடைய அமைச்சர்களெல்லாம், சாலையிலேயே காரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/24&oldid=1695800" இலிருந்து மீள்விக்கப்பட்டது