உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆகவே போராட்டங்களுக்கு பயந்து விட்டோம்; கிளர்ச்சிகளுக்கு அஞ்சிவிட்டோம் என்பதல்ல; நிலைமைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு இந்திய நாட்டினுடைய அரசியல் சட்டமே கேள்விக்குறியாக மாறிவிட்டிருக்கிறது. இந்தக் கேள்விக் குறியை எழுப்பி இருக்கிறவர் யார்? இந்தியப் பேரரசின் சட்ட அமைச்சர் கோகலே அவர்கள்! நானோ, நாவலரோ, பேராசிரியரோ, சட்ட அமைச்சர் மாதவனோ, கழகத்தின் முன்னணி வீரர்களோ, அந்தக் கேள்விக் குறியை எழுப்பி நீண்ட நாளாகிறது. ஆனால் இன்றைக்குத்தான் அந்தக் கேள்விக்குறி விஸ்வ ரூபமெடுத்து டெல்லி மாநிலங்கள் அவையில், சட்ட அமைச்சர் கோகலே அவர்கள் “அரசியல் சட்டமே மாற்றப் படவேண்டிய ஒன்று” என்று கூறுகின்ற ஒரு நிலைமை ஏற் பட்டிருக்கிறது எந்த நோக்கத்தில் அதைச் சொல்கிறார் என்பதல்ல! ஒன்றை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்; 'அரசியல் சட்டம் மாற்றப்படவேண்டிய ஒன்று' என்பதை ஒப்புக்கொண்டிருக் கிறார்கள். நேற்று மணலி அவர்கள் அழகாகக் குறிப்பிட்டார். அரசியல் சட்டத்தை மாற்றவேண்டுமென்று நாமெல்லாம் சொன்ன நேரத்தில், ஆகா அப்படிச் சொல்லலாமா, அது பாவமல்லவா?' என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் இன்றைக்கு இந்திய அரசியல் சட்டத்தில் 41 திருத்தங்களைச் செய்துவிட்டு என்ன திருத்தினாலும் திருந் தாதுபோல் இருக்கிறது; ஆகவே ஒரேயடியாக இதைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறு ஒரு புதிய அரசியல் சட்டத்தை எழுதத்தான் வேண்டும் போலிருக்கிறது என்கிற ஒரு சூசகமான அறிவிப்பை மத்திய சர்க்காருடைய சட்ட அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/38&oldid=1695815" இலிருந்து மீள்விக்கப்பட்டது