உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கணிப்பது என்று 17-11-1951-ல் மதுரைப் பொதுக் குழுவில் தீர்மானமாக நாம் நிறைவேற்றினோம். 1935-ம் அரசியல் சட்டமென்ன? வெள்ளைக்காரன் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தைத்தான் ஏறத்தாழ 75 சத விகிதம் அப்படியே பின்பற்றி அரசியல் சட்டம் என்கின்ற பெயரால் உருவாக்கி இந்திய மக்களை அது கட்டுப்படுத்தும் என்று அறிவித்தார்கள். 1935-ம் ஆண்டு அரசியல் சட்டத்திலேகூட-வெள்ளைக் காரனுடைய சட்டத்திலேகூட "கூட்டாட்சி முறை அரசு" (பெடரல் கவர்ன்மெண்ட்) என்பது ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தது. . ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் "கூட் டாட்சி" அதாவது 'பெடரல்' என்ற வார்த்தை அறவே நீக்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைக் குப்பதிலாக பெடரல்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, "இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" அதா வது "யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்" என்கிற வகையில்தான் வார்த்தை அதிலே நுழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அரசியல் நிர்ணயசபையில் இரண்டு பேர் அதற்குத் திருத்தம் கொடுத்தார்கள். ஒருவடைய பெயர், பேராசிரியர் கே. டி. ஷா. அவர் கொடுத்த திருத்தம், "யூனியன்” என்று சொன்னால் “ஓர் உறுப்பு அரசு” என்றாகிவிடும். வர வர 'யூனிட்டரி கவர்ன் மெண்ட்' என்ற அளவில் ஓர் உறுப்பு அரசாக மாறிவிடும். ஆகவே இதை 'பெடரல் யூனியன்' என்கிற அளவுக்கு யூனியன் என்ற சொல்லுக்கு முன்னால் ‘பெடரல்' என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு திருத்தத்தை கே.டி.ஷா. அளித்தார். அந்தத் திருத்தம் அரசியல் நிர்ணய சபையில் நிராகரிக் கப்பட்டது; நிறைவேறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/41&oldid=1695818" இலிருந்து மீள்விக்கப்பட்டது