உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 விதத்தில்தான் நாம் 1952-இல் சட்டசபையை நிராகரித் தோம். பிறகு 1957 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதா, இல்லையா என்பதை அறிய திருச்சி மாநில மாநாட்டில் ல அண்ணா அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். மக்கள் தந்த தீர்ப்பு! மாநாட்டிற்கு வருகிறவர்கள், நாங்கள் தேர்தலில் நிற்கலாமா, வேணடாமா? என்று தீர்ப்புக் கூறுங்கள் என்று கேட்டார். தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை மாநாட்டுக்கு வந்த மக்கள் தீர்ப்பாக வழங்கினார்கள். அதற்குப் பிறகு கழகம் ஈடுபட்டது. அண்ணா அவர்கள் தலைமையில் பேர் வெற்றி பெற்றோம். தேர்தலில் பதினைந்து நண்பர்களே, அந்த நேரத்தில்தான் 1957-58இல் தி.மு. கழகம் எதிர்க்கட்சிக் குழு என்ற பெயரால் அண்ணா தலைமையில் நாங்கள் எல்லாம் சட்டசபையில் அமர்ந்திருந்த அந்த நேரத்தில்தான் கேரளத்தில் ஈ.எம் எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி உதயமாயிற்று. அப்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாக இருந்த நேரம். இன்றைக்கு அது மூன்றாக இருக்கிறது இடதுசாரி என்றும், வலதுசாரி என்றும், தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சி என்றும் இன்றைக்குப் பிரிந்திருக்கிறது. அன்றைக்கு அப்படியல்ல; ஒன்றாக இருந்த நேரம்; அந்த நேரத்தில் நமது மணலி உட்பட இன்றைக்கு மணலி ஒரு தலைவரா என்று பேசிக் கொண்டிருக்கிற அவருடைய தியாகத்தை உணராத, கம்யூனிசத்திற்குப் பொருள் விளங்காத சில பேர் இருக்கிறார்களே, அவர்கள் உட்பட எல்லோரும் ஒன்றாக இருந்த நேரம் அது. அந்த நேரத்தில் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி உருவாயிற்று. ஆட்சி நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/43&oldid=1695820" இலிருந்து மீள்விக்கப்பட்டது