உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூளுரை இலட்சோபலட்சமெனத் திரண்டிருக்கின்ற இந்த மாபெரும் மக்கள் வெள்ளித்திற்கிடையே நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர் நாவலர் அவர்களும்- பொருளாளர் பேராசிரியர் அவர்களும் இந்திய அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் குறித்து மிக விளக்கமாக உரையாற்றியிருக்கிறார்கள். இங்கே நடைபெறுகின்ற இந்த மாபெரும் பொதுக் கூட்டம், தலைமையமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களைத் தாக்குவதற்காக அல்ல - இந்தியாவின் சனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக! இந்த நோக்கத்தை மாற்றாரும் - மற்றவர்களும் - மத்தியில் உள்ளவர்களும் புரிந்து கொள்வார்களேயானால், தி.மு.கழகம், சனநாயகத்தின்பால் எவ்வளவு அன்பு கொண்டு - பற்றுக்கொண்டு திகழ்கிறது என்ற உண்மை யைத் திட்டவட்டமாக உணருவார்கள் என்று நம்புகிறேன். பகை உணர்வு கொண்டோமா? இந்திரா காந்தி அம்மையாரிடத்தில் கழகத்திற்குத் தனிப்பட்ட எந்தவிதமான பகை உணர்ச்சியும் கிடையாது; அவர், பழம்பெருந் தேசத் தலைவர் மோதிலால் நேரு அவர் களின் பேத்தி என்கின்ற பெருமையையும்-இந்தியாவின் சனநாயகக் காவலர் பண்டித ஜவகர்லால் நேரு அவர் களுடைய திருமகளார் என்கின்ற பெருமையையும்- உத்தமர் காந்தியார் மடியிலே தவழ்ந்த குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே இந்திய மக்களுக்கு அறிமுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/5&oldid=1695781" இலிருந்து மீள்விக்கப்பட்டது