உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நான் உங்களுக்குச் சொல்வேன், இது கிருஷ்ணன் தூது அல்ல: கிருஷ்ணன் தூது என்றால், கிருஷ்ணன் வெளிப் பார் வைக்குத் தூதனாகச் சென்றாலும், உள்ளூர பாண்டவர் பக்கம்தான் இருந்தான். ஆகவே தான் நான் கிருஷ்ணன் தூதாகச் செல்லவில்லை. பாண்டவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை உள்ளத் திலே வைத்துக் கொண்டு, எப்படியும் போர் நடைபெற வேண்டும்; அந்தப் போரில் பாரதத்தில் உள்ள பலபேரும் செத்திட வேண்டும்; அதற்காகத்தான் கிருஷ்ணாவதாரமே நடைபெற்றது என்ற தத்துவதத்தை உள்ளடக்கிக் கிருஷ்ண பரமாத்மா பாரதப் போர் முடிந்த பிறகு சொல்கிறான்: "உலகத்திலே ஜீவராசிகள் அதிகமாக ஜனித்து விட்டார்கள்; அவர்களை எல்லாம் ஒழிப்பதற்காகத்தான் இந்த அவதாரமே மேற்கொண்டேன்" என்று கிருஷ்ணனே சொல்கிறான்; கிருஷ்ணன் தூது, "ஐந்து நாடு கொடு; அல்லது ஐந்து நகரமாவது கொடு; அல்லது ஐந்து வீதியாவது கொடு அல்லது ஐந்து வீடாவது கொடு" என்று கேட்ட தூது. கிருஷ்ணன் தூது. துவாரகையிலிருந்து- வடக்கே. சென்ற தூது, ஆனால் இது தெற்கேயிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் தூது. 'உருவுகண்டு எள்ளாமை வேண்டும் கோவூர் கிழார் என்ற சங்க காலப் புலவர் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு சோழர்களுக்கும் நண்பர்; ஒரு நாள் நெடுங்கிள்ளியின் பால், நலங்கிள்ளியின் அவைக்களப் புலவர் இளந்தத்தன் என்பான் வருகிறான். நெடுங்கிள்ளி "இவன் புலவன் அல்ல, நலங்கிள்ளியால் அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றன்" படுகிறான். என்று சந்தேகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/58&oldid=1695835" இலிருந்து மீள்விக்கப்பட்டது