உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அதைப் போலத்தான், சேலம் மாவட்டத் தி.மு.கழகத் தோழர்களிடம், 'வேற்றுமை' என்கின்ற பொ ய்மான் இருக் கிறது என்று யாராவது சொல்வார்களானால், அவர்கள் தொலைவிலிருந்து ஒரு கோணத்தில் பார்த்து 'வேற்றுமை என்று சொல்கிறார்கள் என்றுதான் பொருள் ! அருகே சென்று பார்க்கும்போது பொய்மான் மறைந்து விடுவதைப்போல, 'தி.மு.கழகத் தோழர்களிடத்தில் எந்த வேற்றுமையும் கிடையாது என்ற சூழ்நிலையை இந்த மாநாடு முழுமையாகக் காட்டுகிறது' என்று நான் சொல்லமாட் டேன் - 'முழுமையாக்குவதற்கு ஒரு முன்னோடியாக அமை கிறது' என்றுதான் சொல்வேன் வரவு - செலவு மிச்சம் இந்த மாநாட்டின் மூலமாக வசூலான மொத்தத் தொகை - நன்கொடை, நுழைவுக் கட்டணம் ஆகியவை - களின் மூலம் ரூ. 4,10,638; செலவு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாய் போக-மிச்சம் ரூ.2,10,638 என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கனவில் வரவேற்புக் குழுத் தலைவர் ஆறுமுகம் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், தான் ஒரு கனவு கண்டதாக வும் - அந்தக் நான் வந்ததாகவும் - அப்போது என்னிடம் ஆயிரம் ரூபாய் மாநாட்டிற்கு நிதியாகத் தர வேண்டுமென்று அவர் கேட்டதாகவும்-ஆனால் உண்மையில் நான் நூறு ரூபாய்தான் நேரில் தந்ததாகவும் - ஆகவே, கனவில் ஆயிரம் தந்துவிட்டு-அதற்குப் பிறகு நேரடியாக நான் கொடுத்த நூறு ரூபாய் போக மிச்சமுள்ள 900 ரூபா யைத் தரவேண்டுமென்றும் கேட்டார். அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்- மீண்டும் ஒரு கனவு காணுங்கள்; அதிலே வந்து அந்த 900 ரூபாயைத் தருகிறேன்' என்று! (பலத்த கைதட்டல்) கனவு கண்டது ஆறுமுகத்தின் குற்றமே தவிர, என் குற்றமல்ல! 5-A

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/69&oldid=1695846" இலிருந்து மீள்விக்கப்பட்டது