உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 ஆனால் கல்யாணசுந்தரம், ‘பூ எப்போது வைத் தாயோ,கொண்டையை அவிழ்த்துவிடு' என்கிறார். வேட்டி கட்டி-அசற்குப் பிறகு சட்டை போடு கிறோம்; வேட்டி கட்டியதுதான் சென்னைத் தீர் மானம்; அதற்குத் தொடர்ச்சியாக சட்டை போடு நெல்லை மாநாட்டுத் தீர்மானம் வதுதான் (கைதட்டல்). பிறகு ஆனால், கல்யாணசுந்தரம், 'சட்டை போட்ட வேட்டி எதற்காக-அவிழ்த்துவிடு' என் கிறார் (பலத்த கைதட்டல்). இந்த விசித்திரமான மனிதர்களுக்கு உள்ள கவலை எல்லாம், 'எப்படியாவது கழகத்தை, மத்திய அரசின் பார்வையில் ஒரு மூலையில் தள்ளி இந்த அரசைக் கவிழ்க்க வேண்டும்' என்பதுதான்! ஆனால், நம்முடைய தீர்மானங்களுக்குப் பிறகு - அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்ட மாநாட்டுத் தீர்மானத் திற்குப் பிறகு -இந்திரா காந்தி அம்மையார் அவர்களுடைய அறிக்கைகள் நமக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றன! நானோ - நாவலரோ - பேராசிரியரோ-மற்ற தலைவர் களோ, 'பார் பார்; நெல்லையில் நாங்கள் போட்ட தீர்மா னத்திற்கு உடனே இந்திரா காந்தி அம்மையார் பதில் அளித் திருக்கிறார்-எங்கள் தீர்மானத்தை மதித்திருக்கிறார்' என்று ஆணவத்தோடு மார் தட்டிக்கொள்ள விரும்பவில்லை! ஆனால், 'இந்தத் தீர்மானத்திற்குத்தான் இந்தப் பதில்' என்று சொல்லாவிட்டாலும், எங்களுடைய எண்ணத்திற் கேற்ப - வேண்டுகோளுக்கேற்ப, இந்திரா காந்தி அம்மை யார் அவர்களுடைய சமீபகால அறிக்கைகளானாலும் ஆகஸ்டு 15-ஆம் நாள் விடுதலை நாள் விழா உரையாலும்- அமைந்திருக்கின்றன! ஆகஸ்டு 13-ஆம் தேதி, 'சோஷலிச இந்தியா' என்கின்ற பத்திரிகைக்கு இந்திரா காந்தி அம்மையார் ஒரு பேட்டி 6-A

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/85&oldid=1695862" இலிருந்து மீள்விக்கப்பட்டது