உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கழகத்தின் கொள்கை என்ன? மாநில சுயாட்சி-மத்தி யில் கூட்டாட்சி; கழகத்தின் இந்த இலட்சியத்திற்கு நாம் வடிவம் அமைத்திருக்கிறோம்! சட்டத்தைத் திருத்துகையில் கோரிக்கையைக் கவனியுங்கள் அரசியல் சட்டத்தைத் திருத்தப் போவதாகச் சொல்கிறார்கள்; அப்படி திருத்தப்படுகின்ற நேரத் தில் அல்லது மாற்றியமைக்கப்படுகின்ற நேரத்தில், இந்திரா காந்தி அம்மையார் அவர்களே-சட்ட அமைச்சர் கோகலே அவர்களே - இந்தியாவின் தலைமைப் பீடத்தில் இருக்கின்ற தலைவர்களே- 1°46-இல் நேரு, காந்தியடிகள், அபுல் கலாம் ஆசாத் ஆசிய அத்தனைப் பேரும் கூடிப் பேசி, 'இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மாநிலங்களுக்கெல்லாம் முழுமையான சுயாட்சி தர வேண்டும்' என்று சொன்னார்களே-அதை இப்போதாவது நினைத்துப் பார்த்து, 'நீங்கள் அடியோடு மாற்றவிருக்கின்ற சட்டத்தில், மத்தியிலே தேவையான அதிகாரங்களை - இந்தியாவைப் பலப்படுத்தும் அதிகாரங்களை - வெளிநாட்டான் சுரண்டாமல், ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கின்ற தேவையான அதிகாரங்களை தைத்துக் கொண்டு மற்ற அதிகாரங் களை எல்லாம் மாநிலங்களுக்குப் பரவலாக்கும் அளவிற்கு அரசியல் (சட்டத்தை மாற்றுங்கள் என்ற கோரிக்கையை இந்த மாநாட்டின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அரசு கவிழ்ப்பு இயக்கத்திற்கு நமது ஆதரவு இல்லை நாங்கள் அரசு கவிழ்ப்பு இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அல்லர் சொல்லப்போனால். ஜெ. பி. அவர்களின் இயக்கத் தின் அந்தக் குழுவில், நம்முடைய நண்பர்கள் செழியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/92&oldid=1695869" இலிருந்து மீள்விக்கப்பட்டது