பக்கம்:செங்கரும்பு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இனிக்கின்ற பாடல்களைப் பாடி லுைம் இறுதியிலே இதயமதில் நிற்ப தென்ன? அணைக்கின்ற பெண்சுகத்தின் அடுத்த கட்டம், ஆவலெல்லாம் அகன்றதுமே முடிவு என்ன? நினைக்கின்ற எல்லாமே நிகழ்ந்து போல்ை - நிழல்போலத் தொடர்வோனின் நிலைமை என்ன? தணியாதத் தாகத்தைத் தீர்க்கும் தண்ணிர் - ജ தணித்தபின்னே தானடையும் பெருமை * - - போல்தான்! 22 வகிடெடுத்து முன்முடியால் மறைத்த போதும் வழுக்கைதனை எத்தனைநாள் மறைக்கக் கூடும்? பகட்டான உடையாலே கிரந்திப் புண்ணை பாருக்கே எத்தனைநாள் மறைக்கக் கூடும்? இகத்தாரைப் பொய்சொல்லி ஏய்த்தாலும்தான் இதயத்தை எத்தனைநாள் ஏய்க்கக் கூடும்? அகிலத்தில் ஆண்டவனும் இருக்கின் ருன்காண்! அவன்இடமே மனசாட்சி, அவனே சாட்சி! 23 விந்தைமிகு இதயத்தின் விளையாட் டெல்லாம் விடுகதைதான்; சுடுநீர்தான்; புதைசே றும்தான், ந்தையிலே மாடுகளாய் திரியும் எண்ணம் சமுத்திரத்து நண்டுகளாய் பயந்தே ஒடும் |ந்தயத்துக் குதிரையெனப் பாயும்; வெய்யில் படும்மணலில் கழுதையென புரளும்; பீற்றல் ந்தையிலே காணுகின்ற ஓட்டை போலே காலமெலாம் தான்கசங்கி செழுமை காணும் 24