பக்கம்:செங்கரும்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gö6 "கங்கை நீரில் ஆடுவதற்குக் காரணம் ஏதாவது உண்டா? அன்றி, காரணமின்றியே ஆட வந் தீர்களா?” - * காரணம் உண்டு. கோவலன் இறந்த செய்தி யைப் பலருக்குச் சொன்னேன். அது கேட்டுத் துயரம் தாங்காமல் சிலர் இறந்தார்கள். அவர்கள் அப்படி இறப்பதற்கு நான் காரணமாக இருந்தமையால் அந் தப் பாவத்தைப் போக்கும் பொருட்டுக் கங்கை நீர் ஆட வந்தேன்.' - "யார் யாருக்குச் சொன்னிர்கள் ? என்ன நிகழ்ந்தது? சற்றே விரிவாகச் சொல்லவேண்டும். நான் தமிழ் நாட்டை விட்டு வந்து பல நாட்கள் ஆயினமையின் அந்தப் பக்கத்துச் செய்திகளைச் சொல் வார் இல்ல்ை. நல்ல வேளை இப்போது நீங்கள் வந் தீர்கள். எல்லாவற்றையும் அடைவாகச் சொல்லுங் கள்.' - "நான் சொல்லப்போவது நல்ல செய்திகள் அல்ல. இறந்ததும் துறந்ததுமான செய்திகளே அவை.' - 'இருக்கட்டும். அதனுல் என்ன ? நடந்ததைத் தானே சொல்லப் போகிறீர்கள் ? சொல்லுங்கள்.' கோவலன் கண்ணகியோடு மதுரைக்குச் சென்றபோது ஊருக்குப் புறம்பேயுள்ள ஆயர்பாடியில் அவளை இருத்திவிட்டுச் சென்ருன். அங்கே இருந்த ஆயர்குல மகளாகிய மாதரி என்பவள் அவளுக்கு வேண்டிய பண்டங்களைக் கொடுத்துச் சமைத்து உண் னும்படி சொன்னுள்; தாய் போன்ற அன்பைக் காட்டினுள். கோவலன் கொலையுண்டதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/72&oldid=840811" இலிருந்து மீள்விக்கப்பட்டது