பக்கம்:செங்கரும்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சாரும்? அதனுல்தான் இங்கே கங்கையில் நீராட வந்தேன்' என்று மாடலன் கூறி முடித்து அரசனை வாழ்த்தின்ை. செங்குட்டுவன், 'பாண்டி நாட்டில் இப்போது யார் அரசாள்கிருர்?' என்று கேட்டான். "கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் அரியணை ஏறியிருக்கிருன்' என்ருன் மாடலன். இப்படி அவ்வந்தணைேடு சேரமான் உரையாடிக் கொண்டிருந்தபோது கதிரவன் மறைந்தான். இரவு வந்தது. வெள்ளிய பிறைவானத்திலே தோன்றியது. அதனுடைய அழகைப் பார்த்துக்கொண்டு வெளிய்ே வந்து நின்ருன் அரசன். அந்தச் சமயம் பார்த்து அரசனுடன் வந்திருந்த சோதிடன், “அரசர் பெரு மான் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டு முப்பத் திரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. வாழ்க நின் கொற்றம்' என்று கூறினன். இனி விரைவில் திரும்பிச் செல்லவேண்டும் என்று அரசனுக்குப் புலப்படுத்துவதற்காகவே அவன் இந்தச் செய்தியைச் சொன்னன். அரசன் தன் கூடாரத்தை அடைந்து மாடலனை அழைத்துவரச் சொன்னன். அம் மறையவன் வந்த தும், காவிரிப்பூம் பட்டினத்தில் சோழ மன்னன் நலமாக இருக்கிருளு?' என்று கேட்டான். செங் குட்டுவனுக்கு உறவினன் அவன். - சோழன் செங்கோல் திறம்பாது ஆட்சி புரிந்து வருகிருன். அவனுக்குத் தீங்கு ஏதும் இல்லை' என்று விடை கூறினன் மாடலன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/74&oldid=840813" இலிருந்து மீள்விக்கப்பட்டது