பக்கம்:செங்கரும்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தில் புகுந்து வேலை செய்யத் தொடங்கின. அவன் மாடலனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். "எல்லோரும் உண்ணுகிருர்கள்; உறங்குகிருர் கள்; செத்துப்போகிருர்கள்; மறுபடியும் ஏதாவது ஒரு பிறவியை எடுக்கிருர்கள். அத்தகைய நிலை தங்களுக்கு வரக்கூடாதென்பது என் ஆவல். இனி, போர்க்களத் தில் வென்று வெற்றியைநிலைநாட்டும் கருத்தை மறந்து விட்டு அறநெறிக்குரிய வேள்விகளைச் செய்யவேண் டும். இராசசூய யாகம் செய்தல் நல்லது. அதை இப்போதே செய்யவேண்டும். நாளைக்குச் செய்யலாம் என்ருல், நாம் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்ற உறுதி நமக்கு இல்லை. ஆகையால் தங்கள் வாழ்க்கைத் துணைவியாகிய அரசியாரோடு இருந்து பெருவேள்வி செய்து நீடுழி வாழவேண்டும்' என்று சொல்லித் தன் நல்லுரையை முடித்தான் மாடலன். அவனுடைய நயமான ம்ொழிகள் செங்குட்டுவ னுடைய உள்ளத்தில் மெல்ல மெல்லப் புகுந்தன. சேர அரசனும் அறிவுடையவனுதலால் அந்தணன் கூறியவை தனக்கு நலம் செய்வன என்பதை நன்கு உணர்ந்தான். - - பின்பு ஒரு நல்ல நாளில் வேள்விச் சாந்தி செய் வதற்கு ஏற்ற மறையவர்களையும் மற்றத் துணைவர் களையும் அழைத்துவரச் செய்தான். மாடலன் சொல்லிய முறையில் பெருவேள்வியை நடத்து வதற்கு ஆவன செய்யும்படி ஏவின்ை. சிறையில் வைத்திருந்த இரண்டு வடநாட்டரசர்களையும் பிறரை யும் விடுதலை செய்து வஞ்சிமாநகர்ப்புறத்தில் தங் யிருக்கச் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/82&oldid=840822" இலிருந்து மீள்விக்கப்பட்டது