பக்கம்:செங்கரும்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 போது அவளுடன் இருந்து அளவளாவும் பேறு பெற்றவள்' என்ருள் தேவந்தி. தன் கணவன் தன்னைப் பிரிவதற்குக் காரணமாக இருந்த மாதவியினிடம் சிறிதும் சினம் கொள்ளாமல், தன் கணவனுடன் காட்டுவழியே சென்ற கண்ணகிக் குச் செவிலித்தாய் நான்' என்ருள் மற்ருெருத்தி. " தன்னைப் பெற்ற அன்னைக்கும் அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை. வளர்த்த செவிலியாகிய என் அன்னைக்கும் ஒரு சொல் இல்லை. யாரும் அறியா மல் கற்பு ஒன்றையே கருதித் தன் கணவன் பின்னே போன அந்தப் பெருமாட்டிக்குத் தோழி நான்' என்ருள் ஒருத்தி. ஐயை இன்னுள் என்பதையும் தேவந்தி சொன் ளுள். யாவரும் கண்ணகியின் உருவச் சிலையைக் கண்டு ஆராமை மீதுாரப் பார்த்தார்கள். அப்போது செங்குட்டுவன் வானத்தில் ஒரு காட்சியைக் கண்டு வியந்தான்; ' என்னே இது! என்னே இது பொற்சிலம்பும் மேகலையும் வளைக் கையும் வயிரத் தோடும் பொன்னுபரணங்களும் அணிந்து, மின்னற்கொடி போன்ற ஓர் உருவம் அதோ வானத்தில் தோன்றுகிறது!’ என்று அவன் கூவினன். எல்லாரும் அத்திசையை நோக்கினர்கள். அப்போது வானிலே ஓர் ஒலி எழுந்தது. "நெடுஞ் செழியனுகிய பாண்டியன் சிறிதும் குற்றம் இல்லாத வன். அவன் தேவ அரசனுடைய அரண்மனையில் நல் விருந்தாக இருக்கிருன். நான் முருகன் எழுந்தருளி யிருக்கும் குன்றில் என்றும் விளையாடுவேன். தோழிமார் எல்லாரும் வாருங்கள்' என்று அந்த ஒலி கூறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/86&oldid=840826" இலிருந்து மீள்விக்கப்பட்டது