பக்கம்:செங்கரும்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஞர்கள். வடநாட்டு அரசர்களும், கொங்குநாட்டு மன் னரும், மாளுவ வேந்தரும், இலங்கையிலிருந்து வந் திருந்த கயவாகு வேந்தனும், 'பத்தினிக் கடவுளே! எங்கள் நாட்டிலும் உன்னை நிறுவி வணங்க எண்ணி யிருக்கிருேம். இங்கே நீ இருந்து அருள் செய்தது போல அங்கும் எழுந்தருளி வரம் தர வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார்கள். 'அவ்வாறே தந் தேன் வரம்' என்று ஒரு குரல் வானில் எழுந்தது. யாவரும் மனம் உருகி அத்தெய்வத்தை வாழ்த்தினர் கள். செங்குட்டுவன் அங்கிருந்து அகன்ருன். அதன் பின்பு இளங்கோவடிகள் கோயிலுக்கு வந்தார். கண்ணகியை வாழ்த்தி வணங்கினர். அப் போது தேவந்தியின்மேல் கண்ணகி ஆவேசமாக வந்து, இளமையில் இளங்கோவடிகள் துறவுபூண்ட வரலாற்றை எடுத்துரைத்தாள்; "செங்குட்டுவனுக்கு உண்டான கவலையை நீக்கி, இந்தப் பூபாரம் எனக்கு வேண்டாம் என்று துறந்து, சிந்தை செல்லாத பேரின்ப அரசை ஆள்கின்ற வேந்தன் நீ அல் லவோ?’ என்று பாராட்டினள். இளங்கோவடிகள் பத்தினித் தெய்வத்தைப் பரவிப் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/88&oldid=840828" இலிருந்து மீள்விக்கப்பட்டது