பக்கம்:செங்கரும்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இளங்கோ, "நாம் முன்பு ஒருகால் பேசிக் கொண்டது இறைவன் அருளால் நிறைவேறி விட்டது. இருவரும் பெருநூல்களைச் செய்யவேண்டு மென்று உரையாடியதுநினைவு இருக்கிறதா?’ என்ருர், "ஆம் நன்ருக நினைவில் இருக்கிறது. நான் இந்தக் காவியத்தை முடித்துப் பல நாட்களாயின. வேறு வேலைகள் இருந்தமையால் முன்பே வர முடி யாமற் போயிற்று' என்று சாத்தனர் சொன்னர். இரண்டு புலவர்களும் ஒருவருக்கொருவர் தம் காவியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டார்கள். அடுத்தடுத்து இந்தக் காவியங்களை அரங்கேற்றுவது என்று தீர்மானித்தார்கள். : சாத்தனர் செங்குட்டுவனிடம் சென்று தங்கள் கருத்தை எடுத்துச் சொன்னர். அவன் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தான். அரங்கேற்றம் நடைபெற்றது. முதலில் இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றினர். அந்த அவையில் தலைவராகச் சாத்தனர் இருந்தார். அடுத்து, சாத்தனர் மணிமேகலையை அரங்கேற்றும்போது இளங்கோவடிகள் தலைவராக இருந்தார். இரண்டு நூல்களையும் யாவரும் கேட்டு இன்புற் ருர்கள். சிலப்பதிகாரத்தின் அமைப்பும் சுவையும் சம ரச எண்ணமும் மிகச் சிறந்தனவாக இருந்தன. ஆத லால் அதை அதிகமாகப் புலவர் பாராட்டத் தொடங் கினர். அழகான வருணனைகளும், பாடுவதற்குரிய இசைப் பாட்டுக்களும், பண்பு நிறைந்த உரையாடல் களும் நிரம்பிய அது, விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவிப் பெருமையைப் பெற்றது. அம்பிகையின் அடி யார்கள் வேட்டுவ வரியில் உள்ள பாடல்களைப் பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/92&oldid=840833" இலிருந்து மீள்விக்கப்பட்டது