பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரிப் பள்ளு 75, இங்கிதப் பேச்சில் வெகு பகட்டும் உடையவளாய் அவள் வந்து தோன்றுகிருள். அடுத்தபடியாக, இளைய பள்ளி மஞ்சள் மணம் வீசிய மெய்யும், கொஞ்சிப்பேசி ஆடிய கையும் உடையவளாய் வருகிருள். பிறகு, பழகிக் குமர வேளின் பண்ணேயாளாகிய பள்ளன் வந்து தோன்றுகிருன். அவன் "உன்னிப் பேசியே யுலாவி மின்னிய சந்திர காவி யுருமால் தலையிற் கட்டி யோடி யதட்டி’ வருகிருன். பண்ணைக்காரனிடம் பள்ளனும் அவனுடைய இரண்டு மனைவியரும் நாட்டின் வளத்தைப் பற்றிக் கூறு: கிருர்கள். பிறகு, "ஆடுவெட்டிப் பொங்கலிட்டுச் சாடு கிறைய-இரண் டாயிரம் பழங்கள் வைத்துக் கோயிலின் முன்பு வேடிக்கையாய்ச் சாம்பிராணித் துTபம் போட்டுப்’ பயிர் விளைய நல்ல மழை பெய்யவேண்டும் என்று வேண்டிக் கொள்கிருர்கள். இப்பொழுது மழைக்குறி தோன்றுகிறது. எப்படி ? 'கொங்கு மின்னில் ஈழமின்னல் கூடி மின்னுதே-ஒரு கோடி வானம்பாடி மழை தேடி யாடுதே. எங்கு மேகீழ்க் காற்றடித்துச் சங்கை யில்லாமல்-இப்போ ஏற்ற முள்ள கொம்பு சுற்றிக் காற்ற டிக்குதே." மழை பெய்துவிட்டது. வெள்ளம் புரளுகிறது. எப்படி ?