உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறு பேண் 18

ஒரு சிறு பெண்ணேப்பற்றி-பேச வேனும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு இருந்தது. அதனல் அவர்கள் மறு படியும் ஒருவர் பேச்சில் மற்றவர் குறுக்கிடலானர்கள் X#. * \, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காங்கள் எழுந்து எங்கள் வழியே போனுேம். எனது எண்ணங்கள் எல்லாம் அந்தப் பெண்ணேப் பற்றியே இருந்தன. எனினும், நான் எவ்வளவு தான்் முயன்று பார்த்த போதிலும் அவள் உருவத்தை என்னுல் கற்பனை செய்ய முடியவே இல்லை. எனது கற்பனைத்திறனின் பலவீனத்தை உணரவும்.எனக்கு வேதனை தான்் ஏற்பட்டது. -

கல்லதையும் அழகானதையும் கற்பனை செய்வது எப் பொழுதுமே ஒரு ரஷ்யாக்காரனுக்குக் கஷ்டமான காரிய மாகத்தான்் இருக்கிறது...

வண்டி ஒட்டிச் செல்லும் உக்ரேனியவாசி ஒருவன் விரைவில் எங்களைக் கடந்து முன்னேறினன். அவன் எங்களைச் சோகத்தோடு பார்த்து,எங்கள் வணக்கத்திற்குப் பதில் வணக்கமாகத் தன் குல்லாயை உயர்த்திக் கொண் டான். -

"வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள். உங்களை நான் பக்கத்து ஊரில் கொண்டு போய் விடுகிறேன்' என்று அவன் அக் கிழத்தம்பதிகளே அழைத்தான்்.

அவர்கள் வண்டியில் ஏறினர்கள். உடனேயே புழுதிப் படலம் அவர்களை விழுங்கி விட்டது. தன் பால் அன்பு காட்டும்படி அவர்களைத் தூண்டி விட்ட சின்னஞ் சிறு பெண் ஒருத்தியின் ஆத்ம நலனுக்காகப் பிரார்த்தனை செய் வதற்கு என்று பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்த அந்தக் கிழவனேயும் கிழவியையும் சுமந்து சென்ற அந்த வண்டியைப் பார்த்துக் கொண்டே நான் புழுதியினூடே நடந்தேன். (1895)