உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு குழந்தைகள் - - 15

ஏழைச் சிறுவனையோ அல்லது எளிய சிறுமி ஒருத் தியையோ பனியில் விறைத்துச் சாகும்படி செய்வதற்கு எனக்கு மனம் வருவதில்லை.

நான் கூட எக்காலத்திலும் குளிரினல் விறைத்துப் போனதில்லை; அப்படி விறைத்து மாண்டு போன ஒரு ஏழைச் சிறுவன் அல்லது ஏழைச் சிறு பெண் யாரையும் பார்த்ததுமில்லை. ஆகவே, குளிரினல் செத்துக் கொண் டிருக்கும் பரபரப்பான காட்சியை நான் வர்ணிக்க முயன்றால், என்னேப் பார்த்து மற்றவர்கள் கேலி செய் யக்கூடும் என்று அஞ்சுகிறேன். அதுவும் போக, உயிர் வாழும் ஒரு ஜீவனுக்கு கினேவுறுத்துவதற்கு என்று உயிருள்ள மற்றொரு ஜீவனைக் கொல்லுவது கொஞ்சம் மதி கேடான காரியமாகத்தான்் தோன்றுகிறது.

அதனுல் தான்், குளிரில் விறைத்துச் செத்துப் போகாத ஒரு சின்னப் பையனையும் ஒரு சிறு பெண்ணே 'யும் பற்றிய கதையை நான் சொல்ல விரும்புகிறேன்.

கிறிஸ்துமசுக்கு முந்திய நாள் சாயங்காலம். அப் பொழுது மணி ஆறு தான்். பனியை மேகங்களாக வாரி இறைத்தபடி காற்று வீசிக் கொண்டிருந்தது. ஒளி ஊடுருவிச் செல்லும்படி அமைந்து கிடந்த குளிர்ச்சியான அம்மேகங்கள் சிதைவுற்ற சல்லாத்துணி போல் மென்மை யாகவும் லலிதமாகவும் தோன்றின. அவை எங்கும் சுற்றிச் சுழன்றன. கடந்து செல்கிறவர்களின் முகங்களில் மோதிப் புரண்டன: பனிக்கட்டியினுல் செய்த ஊசிகளைப் போல் கன்னங்களில் குத்தின. குதிரைகளின் தலைகள் மீது பனியைத் தெளித்தன. குதிரைகள் தங்கள் தலைகளை மேலும் கீழுமாக அசைத்து, பலமாகக் கனைத்துக் கொண்டு நாசிகள் வழியாக ரோவிப் படலங்களை நெடு மூச்சாகச் சிதறின. கனத்த உறை பனி, கம்பிகளே. நன்முக முடி