உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இரண்டு குழந்தைகள்

'ரொம்ப. ரொம்பவும் பயங்கரமாகக் குளிர்கிறது' என்று அவள் முனு முனுத்தாள்.

நிஜமாகவே குளிர் மிகவும் அதிகமா யிருந்தது. பனிப் படலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கனத்து பனிச் சூறை யாக வளர்ந்து விட்டன. இங்கொரு இடத்தில் தூண் களாக உருவெடுத்தன. அவை அங்கொரு இடத்தில் வைரங்கள் பொதிந்த நீண்ட திரைச் சீலைகளாக மாறித் திகழ்ந்தன.தெரு விளக்குகளைச் சுற்றி அவை அகல பாய்ந்த போது, அல்லது பிரகாசமான ஒளி நிறைந்த கடைச் சாள ரங்களைக் கடந்து வேகமாக ஓடிய போது அவை அழகான காட்சியாக இலங்கின. எண்ணற்ற வர்ண ஜாலங்களோடு அவை பளபளத்தன. அவற்றின் கூரிய கு ள ர் ங் த ஜொலிப்பு கண்களேக் கூச வைத்தது. .

ஆனால் இவை அனைத்தின் அழகும் எனது சிறிய நாயகன் நாயகிக்குச் சிரத்தை அளிக்கவே இல்லை.

மிஷ்கா தான்ிருந்த பொங்திலிருந்து மூக்கை வெளியே நீட்டிக் கொண்டு ஒகோ' என்று கத்தினன். "இங்கே ஒரு மங்தை அப்படியே வருகிறது. எழு, காட்கா, அவர் கள் மீது சாடு' - "அன்பான கனவான்களே...” என்று கடுங்கும் குரலில் நீட்டி இழுத்தவாறு அச் சிறுமி வீதியில் பாய்க் தாள்.

"ரொம்பக் கொஞ்சமாக இருந்தாலும் பரவாயில்லே ஐயா” என்று மிஷ்கா கெஞ்சினன். பிறகு,"ஒடு, காட்கா' எனக் கூவின்ை. - -

"துஷ்டர்கள்! நான் மட்டும் உங்கள் மீது கை வைக் கட்டும். அப்புறம் பாருங்கள்!” என்று, திடீரென்று அங்கு வங்து சேர்ந்த போலீஸ்காரன் ஒருவன் கூச்சல் போட்டான்.