உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

தாளமும் உடன் கூடிய வழியே அவை இசைத்தமிழின்பாற்

படுமென்க. இவ்விசைத்தமிழ், நாடகத் தமிழ்ச் னர்த் தோன்றினமை பற்றி, முன் வைக்கப்படுவத அன்றியும், இவ்விசைத்தமிழே நாடகத் தமிழ்ச் குச் சிறப்பு: விளக்கமும் தந்து நிற்பதாம் இசைத்தமிழ் இல்வழி நாடகக் தமிழிற்கு இயக்கமில்லை. இயற்றமிழும் இசைத்தமிழுங் கூடிய வழியே நாடகத்தமிழ் பிறக்குமென்று கூறுதலே அமைவுடைத்தாம்.

兹 馨 懿 懿

இனி இடைக்காலத் தொடக்கத்தில் தோன்றிய இசைத் தமிழிலக்கிய நூலாகிய மூவர் தேவாரங்களும், தமிழிற்கே உரிய பண்ணும் திறனும் பயின்றனவாகி ஒளிர்கின்றன. அத் தேவாரங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட இசைத்தமிழிலக்கிய நூல்களில் வடமொழி இராக அமைப்பும் தாள அமைப்புங் காணப்படுகின்றன. அதன்மேல் இற்றை காள்களில் உலவுறும் இலக்கியமும் இலக்கணமுமாகிய இசைத்தமிழ் நூல்களெல் லாம் மேளகர்த்தா என்னும் வடநூலேத் தழுவியே அமைக் கப்பட்டிருக்கின்றன. இசைத் தமிழின்கண் ஏற்பட்ட வட மொழிக் கலப்பு இவ்வளவுதான்்.

பழைய இசைத்தமிழ் நூல்களுள் பெரும்பாலன இறந்து விட்டன : இரண்டொன்று மட்டில் ஆங்காங்குக் காணப்படு கின்றன. அவைதாமும் சின்னட்களில் வெளியிடப்படா விடின் அழிந்துபடினும் படும். -

நாடகத்தமிழென்பது, கையில் நூலெடுத்துப் படித்தற் குரிய அவகாசமில்லாத வேலைக்காரர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் கல்லறிவு புகட்டும் கோக்கத்தோடு வகுக்கப்பட்டது. அது கேட்போருக்கும் காண்போருக்கும் இன்பம் பயவாவிடின், சாமானிய சனங்கள் அதனை விரும்பிச் செல்லாராதலின், அஃது இன்பச்சுவையொடு இயல்வதாயிற்று. உலகத்தின் இயல்பினே உள்ளதை உள்ளவாறே புனேந்து காட்டுவது நாடகத் தமிழேயன்றி வேறில்லே. இயற்றமிழும் இசைத்தமிழும் சேர்ந்த வழியே நாடகத்தமிழ் பிறந்ததெனி லும், நாடகத்தமிழிற்கு வேறு தனிப்பெருஞ்சிறப்பு உளது. முன்னேயன இரண்டும் கேள்வியின்பம் மட்டிலே பயப்பன