உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

மென்பது கப்பல் சட்டங்களில் ஒன்று. இக்கப்பலின் மாலுமி கள் இப்பயிற்சியை இரண்டு நாட்களில் நிகழ்த்தி, எல்லாவற் றையும் விளக்கமாகக் கூறி, ஒத்திகையைச் செவ்வையாக கட த் திககாட்டினர்கள்.

வானுெவி நிலையம் :

இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ைட பெறும் வானெலி நிகழ்ச்சிகளே இக்கப்பலில் அஞ்சல் செய்கின்றனர். இக்கப்பலில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அக்காடுகளின் வானொலி கிலேயங்கள் அஞ்சல் செய்யவும் தக்கபடி இக்கப்பலில் வானெலி கிலேயம் அமைக்கப்பட்டுள்ளது.

கப்பலின் பெயர்க்காரணம் :

புகழ் பெற்ற கப்பல்களுக்கு அவ்வங்காட்டுப் பெரியார் களின் பெயரிடுதல் மரபு. அமெரிக்கர் தம் கப்பல் ஒன்றுக்கு ரூஸ்வெல்டு என்றும், மற்ருென்றுக்கு வாஷிங்டன் என்றும் பெயரிட்டுள்ளனர். கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம் பரம் பிள்ளே பெயரால், 1949 பிப்பிரவரியில் கம் காட்டில் ஒரு கப்பல் மிதக்க விடப்பட்டதை காம் அறிவோம். இங்கி லாந்தின் மிகப் பெரிய கப்பலாகிய குயின் எலிசபெத்துக்கு அங்காட்டு அரசியின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது.

கப்பல் கம்பெனி :

இக்கப்பல் குளுர்டு வயிட் ஸ்டார் என்னும் ஆங்கிலக் கப்பல் கம்பெனியாரைச் சேர்ந்தது. இங்கிலாந்தின் பெரிய கப் பல்களான குயின் மேரி, அக்விட்டேனியா, மாரடேனி யா, கரோனியா, பிரிட்டானிக்கு என்பனவும் இப்புகழ் பெற்ற கம்பெனியைச் சேர்ந்தவையே. இவற்றுள் குயின் மேரி 81235 டன் நிறையும், மற்றக் கப்பல்களுள் ஒவ்வொன் றும் 28,000 டன்னுக்கு மேற்பட்ட நிறையும் உடையவை.

கப்பல் கட்டப்பட்ட வரலாறு :

இக்கப்பல் கட்டப்பட்ட வரலாற்றை அறிவதும் இன்றிய மையாததாம், 7,000 ஒத்திகைகட்குப்பின் 3,000 சன்னல் கள் உள்ள இக்கப்பலின் அமைப்பு முடிவு செய்யப்பட்டது.