உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உலக இலக்கிய வரலாற்றில் ரஷ்யாவின் ஸ்தான்ம் பெரியது; மிக முக்கியமானதும் கூட. அத்தகைய சிறப்பை ரஷ்யாவுக்குப் பெற்றுத் தந்த இலக்கிய ஆசிரியர்களில் மாக்வலிம் கார்க்கியும் ஒருவர். மற்றவர்களைப் பார்க்கிலும் தனிப்பட்டவர் அவர். உலகின் இதர நாடுகளில் வாழ்ந்து பணியாற்றிய இலக்கிய ஆசிரியர்கள் நடுவில் கூட கார்க்கி முற்றிலும் தனி ரகமானவர் என்றே குறிப்பிட வேண்டும்.

தொல்லைகள் நிறைந்த காலத்தில், குழப்பங்கள் மலிந்த வேளையில், சிறுமைகள் மண்டிக் கிடந்த சமுதாயத்தில், வறுமையும் கொடுமையும் வாழ்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் அவர். உயிர் வாழ்வதற்கே அவர் பலதரப்பட்ட வேலைகளையும் ஏற்று உழைக்கவேண்டியிருந்தது. உணவு விடுதிகளில் சில்லறை அலுவல் கள் செய்வது, கப்பல்தளங்களைத் தேய்த்துக் கழுவுவதுபோன்ற வேலைகள் முதல் எத்தனையோ அலுவல்களில் அவர் உழன்றிருக் கிரு.ர். ரஷ்யாவின் ஒரு மூலையிலிருந்து மறுகோடி வரை நடந்து திரிக்கிருக்கிருர். இவை எல்லாம் தான்் அவருக்குக் கல்லூரிப் படிப்பு ஆக அமைந்தன. நல்லவகை வாழ வேண்டும், மேம்பட்டு உயரவேண்டும் என்ற துர்வக்கனல் அவருள் கனன்று கொண்டே இருந்தது. அறிவுப் பசியும் அவருக்கு அதிகம் தான்். அதனல், அகப்பட்ட புத்தகங்களை எல்லாம் அவர் படித்தார். தான்ும் எழுதத் தொடங்கினர். -

ஆதியில், கார்க்கி கற்பனைக்குத்தான்் முக்கியத்துவம் அளித்து வந்தார். அவருடைய திறமையைக் கண்டு மகிழ்ந்து, அவர் வளர்ச்சியில் உண்மையான அக்கறை காட்டிய இலக்கிய ஆசிரியர் விளாடிமிர் கொலன்கோ என்பவர் கார்க்கியின் குறைகளைச் சுட்டிக்காட்டி, பயனுள்ள யோசனைகளையும் கூறினர். தான்் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கண்ட அனுபவங்களைப் பற்றியும்