உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

படுத்தப் பாடுவதே இசையாகும். பண்டைத் தமிழ் மக்கள் இசையை வெறும்புலன் நுகர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்த வில்லை வாழ்க்கையின் குறிக்கோள் பல கிறைவேற்ற லுக்காகவும் பயன்படுத்தினமையாற்ருன் அவர்கள் கல்வாழ்வு நடாத்தினர்கள்.

இசைத்தமிழைப் பற்றிய நூல்கள் பல தமிழில் இருந்தன. அவற்றுள் ஒன்றேனும் முழுமையாய் இன்று கிடைத்திலது. ஆனால், இங்குமங்குமாகச் சில குத்திரங்கள் நூற்பெயருடன் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்விசை நூல்களாவன : பெரு காரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், பஞ்சமரபு, இந்திர காளியம் முதலியன. இக்காலத்தில் வடமொழியில் வழங்கும் சுரப்பெயர்களாகிய ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழும், தமிழில் குரல், துத்தம், கைக்கிளே, உழை, இளி, விளரி, தாரம் என்பவற்றிற்கு இணையானவை இவ்வேழிலிருந்து உண்டாவனவே பண்களும் திறங்களும். அவை பல வகைப் பட்டு வெவ்வேறு பெயர்களுடன் வழங்கும். இன்ன பண்ணே இன்ன காலத்தில் பாட வேண்டும் என்ற வரம்பும் உண்டு. உதாரணமாக, மாலேக் காலத்தில் பாடுதற்குரிய பண் செவ் வழிப்பண் ; காலேக்குரியது மருதப்பண். இம்முற்ைபில் பாடா விட்டால், அதனேக் கேட்கும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் இன்பம் உண்டாகாது என்பது அறிஞர் துணிபு. இசையினுல் ஆறறிவுடைய மக்களையும், ஐயறிவுடைய விலங்குகளேயும், ஓரறிவுடைய மரஞ்செடி கொடி முதலியவற்றையும் வசப்படுத் தலாம் என்ற உண்மையினேப் பண்டைத்தமிழர் நன்கறிந்திருந் தனர். ஆகவே, இசையைக் கேட்டு அசையும் பொருளன் நி அசையாப் பொருள்கூடத் தன் தன்மைமாறுபடுவதாகக் கூறப் படுகிறது.

மலகளில் தினப்புனத்தைப் பறவை விலங்கு முதலியன அழித்துவிடாமல் குறமகள் பாதுகாப்பது வழக்கம். அங்க னம் பரண் மீதிருந்து பாதுகாக்கும்போது பறவைகள் தினேயை உண்ண வரும். அப்போது குறமகள் இனிய குறிஞ்சிப்பண் பாடுவாள். பாடலைக் கேட்டு மயங்கிய பறவைகள் செயல்மறந்து கின்றுவிடுமாம். யானைகளுங்கூட இப்பாடலேக் கேட்டுத்