உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

纷

மணிமேகலையும் புண்ணியராசனும் §§

மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனுல் கொலேயுண்டிறந்த செய்திகேட்டு வருக்திக்கண்ணிர் விடுவதை ஒருவகையாக மாற்ற கினேந்த அவள் தாய் மாதவி, மணிமேகலையை நோக்கி, நீ தொடுக்கும் பூங்கண்ணி கண்ணிர் பட்டமையான் தூய்மை யொழிக் து ஐயனுக்கு ஆகாததாயிற்று; ஆதலால்,சோலே சென்று புதுமலர் கொணர்க எனக் கூறினுள் கூறலும், அங்கனமே மணிமேகலை சுதமதி என்னும் தோழியோடு மலர் பறிப்பதற்கு உவவனம் என்னும் சோலேக்குச் சென்ருள். இதனே, முன்னரே மணிமேகலையை மனேவியாக அடைய விரும்பியிருந்த அங்ககரத் தரசன் கிள்ளி வளவன் புத்திரன் உதயகுமாரன் என்பான் அறிந்து, அவளேக்கவர் இது தக்க சமயமெனக் கருதித் தேரேறி உவவனம் வந்தான்். அங்ங்ணம் அவன் வருவதையுணர்ந்த சுத மதி என்னும் தோழி மணிமேகலையைப் பாதுகாக்க, அவளே அச்சோலேயிலுள்ள ஒரு பளிங்கறையுள் புகச்செய்து, உதய குமாரனுக்கு அவன் கருத்துத் தவறு என எடுத்துக்காட்டிப் பல நீதிகளைக் கூறினுள். அதனல், அவன் வாளா திரும்பிச் சென்றுவிட்டான்.

பின்னர்ப் பளிங்கறையிலிருந்து வெளிப்போந்த மணி மேகலையும் சுதமதியும் உதயகுமாரனைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவலனது குலதெய்வ மாகிய மணிமேகலா தெய்வம், கோவலன் மகள் மணிமேக கலக்கு முற்பிறப்பின் தொடர்பால் உதயகுமாரன்மீது செல் லும் மனத்தைத் தடுத்து, அவளைப் புத்த சமய வழியிற் செலுத்தி கற்கதி பெறச் செய்யக்கருதி, அவர்கள் அறிந்த ஒரு மடங்தை வேடங்கொண்டு அங்கு வந்து, அவர்களே கோக்கி, நீங்கள் இங்கிருந்தால் மீளவும் உதயகுமாரனல் உங்க ளுக்குத் துன்பம் உண்டாகும்; ஆகையால், முனிவர்கள் வசிக் கும் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்," என்று கூறி, அவர்களே அடுத்துள்ள சக்கரவாளக் கோட்டம் என்னும் இடத்திற்குச் செல்லும்படி செய்தது. அன்றிரவில் சுதமதியும் மணிமேகலையும் அங்கு உறங்கும்போது மணிமேகலா தெய்வம் வந்து, மணிமேகலையை மாய வித்தையால் மயக்கித் தழுவி எடுத் துக்கொண்டு ஆகாய வழியே முப்பது யோசனத் தூரம் தெற்கே சென்று, கடல் சூழ்ந்த மணி பல்லவம் என்னும் விேல் வைத்துவிட்டுச் சக்கரவாளக் கோட்டத்திற்குத் திரும்பி வந்து,