பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடித்தலைவிழுத்தண்டினார் 141) தொடியோள் பௌவம் தொடித்தலைவிழுத்தண்டினார் todi-t-talaivilu-t-tandiyar,பெ. (n.) புறநானூற்றில் 243ஆம் பாடலை இயற்றிய புலவர்; an ancient poet, author of 243" poem in pura-nanuru [தொடித்தலை விழுத்தண்டு – தொடிதலை விழுத்தண்டினார்) தொடிமகள் todi-Imagal, பெ. (n.) விறலி பார்க்க ; see virali. “தொடிமகண் முரற்சி போல்" (கலித், 36, 4). [தொடி + மகள்) தொடியோள் todi-yol, பெ. (n.) பெண்; woman. [தொடி – தொடியோள்) தொடியோள் பௌவம் todi-yol-pauvam, பெ. (n.) குமரியாறு; the ancient river kumari. [தொடியோள் + பௌவம்] குமரியாற்றைக் கடல்கொண்டபிள், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப்பக்கத்துள்ள நிலக்கோடி குமரிமுனையென்னப்படுகிறது. கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடி விட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதிகாரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப் பின், குமரியாற்றைக் கடல் கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப் பட்டதினால், 'தொடியோள் பௌவமும்" என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது. 'தொடியோள் பௌவம்' என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்புரையாவது: "தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே, தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமுமென்றது என்னையெனில், முதலூழியிறுதிக்கண், தென் மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்தியனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினார், காய்சின வழுதிமுதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான், அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னுமாற்றிற்கு மிடையே, எழு நூற்றுக்காவதவாறும். இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன் பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும், கடல்கொண்டொழி தலாற் குமரியாகிய பௌவமென்றாரென் றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், 'வடிவேலெறிந்த ... கொடுங்கடல் கொள்ள' என்பதனாலும், கணக்காயனார் மகனர் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்' என்பது. இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படி கொண்டாலும், தென் துருவத்திற்கும் குமரி முனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென் துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land) என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப்பகுதியும் குமரி முளையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடுநிலப் பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென் துருவ வரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்தனவென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும், இம்முக்கண்டங்களுக்கும் நிலைத்திணை,