பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடுகை 144 தொடுப்புக்கத்தி தொடுகை todugai, பெ. (n.) 1. தொடுதல்; touching. 2. பிடித்த ல்; taking hold of (சாஅக.). (தொடு – தொடுகை) தொடுசு todusu, பெ. (n.) தொடிசு பார்க்க; see todišu. தொடுசுவை todu-svai, பெ. (n.). உணவுடன் கொள்ளும் ஊறுகாய், துவையல் முதலியன; a relish to food condiment (சா அக.). (தொடு + சுவை) தொடுத்து todutt, இடை. (part.) முதல்; from, Ever since. அன்று தொடுத்து. [தொடு -ு தொடுத்து] தொடுத்துவிடு-தல் toduttu-vidu-, 18 செ.கு.வி. (v.j.) 1. சேர்த்துக் கட்டுதல்; to fasten together; to take on. 2. நெறிதவறிச் சேர்த்த ல் (வின்.); to unite persons irregularly in marriage. 3. நீக்குதல் (வின்.); to put out, as an apprentice. 4. ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய்ப் போம்படி செய்தல் (இ.வ.); to cause to go in single file. [தொடுத்து + விடு-) தொடுத்துவை -த்தல் toduttu-vai, 4 செ.கு.வி. (v.i.) எளிதாக இணைத்தல்; to attach, fasten or stich lightly. [தொடுத்து + வை-) தொடுதுணை todu-tunai, பெ. (வி.) உதவி; help. (தொடு + துணை தொடுதோல் todu-tol, பெ. (n.) செருப்பு; sandals, slippers (பட்டினப். 265), மறுவ. காலணி (தொடு + தோல் தொடுப்பி toduppi, பெ. (n.) புறங்கூறுவோன்; slanderer, tale-bearer. [தொடு - தொடுப்பி] தொடுப்பு' toduppu, பெ. (n.) பொருத்து: joint (சாஅக.) (தொடு - தொடுப்பு) தொடுப்பு' toduppu, பெ. (n.) 1. தொடர்பு; sexual relation, intercourse. 2. கள்ள க் கணவன்; paramour (சா.அக.). (தொடு – தொடுப்பு] (தொடுப்பாவது இருபொருட்குண்டான தொடர்பு. அது ஒன்றையொன்று தொட்டபின் நிகழ்வது (மு.தா. 66) தொடுப்பு' toduppu, பெ. {n.) 1. எய்கை ; discharging. 2. தொடர்ந்திருக்கை ; continuity, 3. கட்டுகை ; fastening, changing, linking. 4. கட்டு; tie, bandage. 5. தொடரி (சங்கிலி) (யாழ்.அக); chain. 6. விதைப்பு ; sowing. தொடுப்பினாயிரம் வித்தியது விளைய" (மதுரைக் 1). 7. கலப்பை (பிங்.); plough. 8. தந்திரம் (யாழ்அக.); stratagem. 9. வளைத்து உழுகை, ploughing in rounds, "தொடுப்பே ருழவர்" (சிலம்', 29:230113. குறளை (திவா .); slander, aspersion. 11. தொடுசு; illicit connection. அவனுக்கும் அவளுக்கும் வெகு காலமாகத் தொடுப்புண்டு. 12. கூட்டுறவு (வின்.); close intimacy. 13. செய்கைத் தொடர்ச்சி ; pursuit, prosecution. 14. காலணி (வின்.); sandals.15. கள்ளக்கணவன் அல்ல து கூத்தி; paramour, concubine. 16. கட்டுக்கதை (வின்); fabrication, concoction. 17. மரக்கொம்பு; branch of a tree.18. பழக்கம் (யாழ். அக.); practice.19. தொடக்கம் (யாழ். அக.); commenceinent. ம. தொடுப்பு [தொடு – தொடுப்பு] தொடுப்பு' toguppu, பெ (n.) களவு; theft. "தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று" (தில், பெரியாழ். 2, 3, 9, வியா. பக். 297), தொடுப்புக்கட்டு-தல் toduppu-k-kattu, 12 செ.குன்றாவி. (v.t.) மனவுறுதியோடு பின்ப ற்றுதல்; to pursue with malice. [தொடுப்பு + கட்டு-) தொடுப்புக்கத்தி toduppu-k-katti, பெ. {n.) பட்டாக்கத்தி (வின்.); a sword with an iron gard covering the arm upto the elbow. (தொடுப்பு + கத்தி