பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேசவழமை தேசியப்பண் தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச.94) தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா? (பழ 3. நாவலந் தீவில் அமைந்த 56 தேசங்கள்; countries of ancient India, 56 in number. ம. தேசம் [துகு – திகு – திகை = முடிவு, எல்லை . திகைதல் = முடிதல், தீர்தல், தீர்மானமாதல், 'மாதம் திகைந்த சூலி', 'அதன் விலை இன்னும் திகையவில்லை' என்பது தென்னாட்டு வழக்கு, திகை – திசை = முடிவு, எல்லை , பக்கம். திசை – (தேசு) – தேசம் திசை, தேசம் என்னும் சொற்கள் பக்கம் என்னும் பொருளில் வருதலை 'அந்தத் திசைக்கே போக மாட்டேன்' என்னும் தமிழ் வழக்காலும், 'ஏகதேசம்' என்னும் வடமொழி வழக்காலும் அறியலாம். ஏகதேசம் = ஒரு பக்கம், ஒரு பகுதி, தேசம் என்னும் சொல் முதலாவது எல்லையைக் குறித்து, பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது. ஒ.நோ: சீமை = எல்லை , நாடு (மு.தா. 97} த. தேசம் – skt. desa 56 தேசங்களாவன அங்கம், அவந்தி, ஆந்திரம், ஆலயம், இடங்கணம், இலாடம், உகந்தரம், ஓட்டம், கடாரம், கருசம், கலிங்கம், கன்னடம், காசுமீரம், காந்தாரம், காம்போகம், கிராதம், குகுரம், குரு, குளிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கோசலம், கௌடம், சவ்வீரம், சாதகம், சாலவம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சேரி, சோழம், சோனகம், திராவிடம், திரிகர்த்தம், துளுவம், நிடதம், நேபாளம், பப்பரம், பாஞ்சாலம், பாண்டியம், பாரசீகம், புளிந்தம், போடம், மகதம், மச்சம், மத்திரம், மராடம், மலையாளம், மாளவம், வங்கம், வங்காளம், விதர்ப்பம், விராடம். தேசவழமை tesa-valamai, பெ. (n.) தேசப்பழமை பார்க்க; see tesa-p-palamai. [தேசம் + வழமை) தேசாட்சரி testitcari, பெ. (n.) ஓர் பண்; kindof node. தேசாதி tesadi, பெ. (n.) கவரையர் குலத்தலைவன் (வின்.); chief of the Kavaraiyar caste. தேசாதேசம் tesatesam, பெ. (n.) பற்பல நாடு; various countries. [தேசம் + தேசம் தேசி tesi, பெ. (n.) அழகி; beautiful women. “தேசியைச் சிறையில் வைத்தான்" (கம்பரா. அங்க த, +) | [உல் – துல் – துள் – தொள் – தோள் — தோய் – தேய் - தேச – தேசி தேசிகப்பாடு tesiga-p-padu, பெ. (n.) நாட்டில் நிகழும் வழக்கப்படி, வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்குத் திருக்கோயில்களில் ஒரு வேளை உணவு அளிக்கச் செய்யும் ஏற்பாடு; custom of supplying one time food for those who come from foreign countries. “விண்ணகோவரையர் வைத்த தானம் நிசதி நாநாழி அரிசி தேசிகப்பாடு கொடுப்போ மானோம்" (தெ.க.தொ. 12, 1, 42) தேசியக்கொடி tesia-k-kodi, பெ. (n.) ஒரு நாட்டுக்குரிய அடையாளக்கொடி; national flag. மூவண்ண க் கொடியாகிய நமது தேசியக் கொடியைக் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறுமணி வரை மட்டுமே பறக்கவிட வேண்டும். [தேசம் – தேசியம் + கொடி) தேசிய கீதம் tesiya-kidam, பெ. {n.) தேசியப் பண் பார்க்க ; see tesiya-p-pan. [தேசம் – தேசியம் + கீதம்) தேசியச்சின்ன ம் tesiya-c-cinyam, பெ. (n.) நாட்டை அடையாளப்படுத்தற்குக் கையாளப் படும் கொடி, பண் முதலியன; national flag, national anthem etc., to mark as an emblem of a country [தேசம் — தேசியம் + சின்னம் தேசியத்த லைவர் tesiya-f-talajvar; பெ. (n.) தேசத்தலைவர் பார்க்க; see tesa-t-talaivar. [தேசம் – தேசியம் + தலைவர்) தேசியப்பண் tesiya-p-pan, பெ (n.) நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதும், நாட்டுச் சின்னமாக விளங்குவதுமாகிய பாடல்;