பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

157


இவை தொல்காப்பியரின் விதிகள் 1 அகத்துறைப் பாக்கள் எல்லாம்கலி - பரிபாட்டுக்களில் மட்டும் வருதல் வேண்டும்; 2 புறநிலை முதலிய நான்கு வாழ்த்தியல் வகைகளும் வஞ்சி - கலிப்பாக்களில் வாரா என, 106, 107 சூத்திரங்கள் கூற, அவை வெண்பா-அகவல்களில் தான் வரும் என இவ்விதிகளின் எதிரிடையாயும் 154 ஆம் சூத்திரம் சுட்டுகிறது. இவற்றிற்கு முற்றும் மாறாக, அகநானூறு, நற்றிணை, ஐங்குறு நூறு, குறுந்தொகை அனைத்தும் அகவலிலும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, வள்ளுவர் காமத்துப்பாற் குறள்கள் எல்லாம் வெண்பாவிலும் காதல் பாடுகின்றன

117 ஆம் சூத்திரம் பரிபாடலைக் காதலுக்குரிய கவியாக விதிப்பதற்கு மாறாகச் சங்க காலப் பரிபாடல்களில் பெரும்பாலன, காதல் கருதரப் புறத்திணைப் பாக்களாகப் பயில்கின்றன

இன்னும் மரபியலில் சூத்திரம் 4-5-11ல் பிள்ளை யென்னுஞ் சொல்லும், சூத்-6ல் ‘குட்டி’, சூத்-8ல்'குருளை’, சூத் 22ல் குழவி’, சூத்63-64ல் நாகு” என்ற சொற்களும் இன்னின்ன உயிரினங்களின் குழவி, பிள்ளை, குஞ்சுகளுக்குரியவை என்ற விதிகள் அனைத்தும் பிறழச் செந்தமிழ்ச் செய்யுட்களில் வந்திருக்கின்றன

சூத்திரம் 287 முதல் 291 வரை உவம இயல் விதிகளைப் புறக்கணித்து, உவமப் பொருளோடு பொருந்தா உருபுகள் சிறந்த பழைய தொகைப் பாட்டுக்களில் வழங்குகின்றன

இவ்வாறு முரணும் மாறுபாடுகள் எண்ணில இவை சிறந்த செய்யுள் வழக்குகளில் இருக்க, இவற்றை மறுத்து இலக்கண விதிகளை யாரும் இயற்றத் துணியார் ஆதலால் இவ்விதிகளை யாரும் இயற்றிய காலம் இப்பாட்டுக்களுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னாதல் ஒருதலை இப்பாட்டுக்கள் கிமு 7 ஆம நூற்றாண்டு