பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

செந்தமிழ் பெட்டகம்


சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாம் இவற்றுள் வளையாபதியும் குண்டலகேசியும் கிடைக்கவில்லை முதல் மூன்று காவியங்களும் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களால் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப் பெற்றுள்ளன

சீவகசிந்தாமணி காலத்தாற் சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் பிற்பட்டதாயினும், சிறப்புக் கருதி, வழக்காற்றில் முதலில் வைத்து வழங்கப்பட்டு வருவது சிந்தித்தற்குரியதாகும், இப்பெருங்காப்பியமே தமிழ் மொழியில் முதன் முதல் விருத்தப்பாவால் இயற்றப்பட்டுப் பிற்காலப் பெருங்காப்பியமான கம்ப ராமாயணம் முதலிய சீரிய நூல்களுக்குச் சிறந்த வழி காட்டியாய் அமைந்தது பிற்காலக் கவிஞர்கள் இந்நூலைப் பெரிதும் போற்றிக் கற்றமை, அவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களில் இந்நூலிற் பயின்று வரும் அருந் தொடர்களையும், அணி விசேடங்களையும், அமைப்பு முறைகளையும் பொன்னே போலப் போற்றி வழங்குவதாற் புலனாகும்

இந்நூலை இயற்றிய திருத்தக்கதேவர் சோழர் குடியில் உதித்தவர்; சமண சமய நூல்கள் பலவற்றையும் இளமைப் பருவத்திலே ஐயந்திரிபற ஓதி உணர்ந்த சமண