இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உள்ளே புகுமுன்
உலக மொழிகளில் தழிழ் - சமஸ்கிருதம் இரண்டும் தாய் - தந்தையராய் இணைந்து பிறமொழி பிள்ளைகளை பெற்ற பெருமை உடையது என்பதை மொழியியல் அறிஞர்கள் மறுப்பதற்கு இயலாது
பழங்கால அழகியல் பாரம்பரியங்களை கற்பிக்கும் போதனை முறைகளும், பொதுக் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் நின்று சிறந்தன. இவ்விரு மொழிகளும் ஆகும்
கல்தோன்றி மண்தோன்ற காலத்தே முன் தோன்றிய தமிழன் தாம் உன்டாக்கிய தமிழ் சமஸ்கிருதமும் மொழிக்கும் - மக்களின் மேன்மைக்கும் அளித்த பங்களிப்பு எண்ணிலடங்கா கலை-இலக்கியம்-அறிவியல் விஞ்ஞானம் என படைத்தளித்த அருட் கொடைகள் ஏராளம், ஏராளம்
அத்தகை அருட்கொடைகள் சமுதாய தேவையை முன்னிறுத்தியும், நாட்டு நடப்புகளையும் பொருளாதார கொள்கைகளையும், வரலாற்று அறிவையும், கலை, காவிய, விஞ்ஞான மேன்மையையும் வளர்த்து