பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திராவிடமொழிகள்
ஒப்பிலக்கணம்

தென்னிந்திய மொழிகளுக்குத் திராவிட மொழிகள் எனப் பொதுவாகப் பெயர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகம் ஆகிய மொழிகளும், துடவர் மொழி, கோடர் மொழி, கோண்டு மொழி, கவர் மொழி, மாலர் மொழி, உராவன் மொழி ஆகிய மொழிகளும், பிராஹுயி, பார்ஜி ஆகிய மொழிகளும் திராவிட மொழிகள் என மதிக்கப்படு கின்றன முதலிற் குறிப்பிட்ட ஆறு மொழிகளைப் பொதுவாகத் திருந்திய மொழிகளெனவும், அடுத்துக் கூறப்பட்ட ஆறு மொழிகளைத் திருத்தம்பெறா மொழிகள் எனவும் கூறுவது வழக்கம் பலூசிஸ்தானத்திற் பேசப்படும் பிராஹுயி மொழியும், ஜக்தல்பூரிற் பேசப்படும் பார்ஜி மொழியும் திராவிட மொழிகளின் வரிசையில் வைத்து எண்ணப்படும் முதலிற் குறிப்பிட்ட நான்கு மொழிகளும் நெடுங் கணக்கும் இலக்கியமும் பெற்றுள்ளன. துளு கன்னட எழுத்துக்களாலும், கவர் மொழி ஒரியா எழுத்துக்களாலும் எழுதப்படுகின்றன குடகு, துடவர் மொழி, கோடர் மொழி, கோண்டு மொழி, உராவன் மொழி, மாலர் மொழி ஆகிய மொழிகள் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்படுகின்றன. அஃதாவது, இம்மொழிகள் எல்லாம் பேச்சுவழக்கில் மாத்திரம் உள்ள மொழிகள் என்பது கருத்து பிராஹுயி என்ற மொழியைத் திராவிட மொழிகளில் ஒன்றாக வைத்துக் கிரியர்சன் போன்றவர்கள்