பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

113


தாயம் ஒழிக்கப்பட்டது. மேலும் தமிழ் நாடகங்களில் தெலுங்கு சமஸ்கிருதம் மொழி வசனங்கள் சேர்க்க கூடாதென்று தடுக்கப்பட்டன.

நாடக சங்கீதத்திற்கு ஆதி முதல் துணைக் கருவியாக இருந்த தாளம் அல்லது ஜாலர் தட்டுவது நின்றது. பார்சி கம்பெனிகள் மூலமாகத் தமிழ் நாடகங்களில் புகுந்து துணைக்கருவியாகயிருந்த ஹார்மோனியம் மேடை மீதே அனைவருக்கும் தெரியும்படி இடம் பெற்றிருந்தது மாறி ஒருபுறமாகப் பக்கத் திரைக்குள்ளாகவோ, அல்லது அரங்கத்தின் எதிராகத் தரைமட்டத்தின் கீழுள்ள இடத்திற்கோ சென்றது. கூடுமான வரையில் பக்க வாத்தியக்காரர்களும், அவர்களுடைய துணைக் கருவிகளும், சபையோர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் இருக்க இடம் அமைத்தனர்.

அரங்கத்தின் வெளிச்ச அமைப்பிலும், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இடைக் காலத் தில் மேற்கூறியபடி தொங்கிக்கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்குகள் நீக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக ஆங்கில நாடக மேடை வழக்கின் படி விளக்குகள் அரங்கத்தின் முன்பக்கம் அமைக்கப் பட்டன. அவற்றின் வெளிச்சம், அரங்கத்தின் மீது மாத்திரம் விழும்படி அவை ஒருபுறம் மறைக்கப்பட்டன. முதலில் இவை எல்லாம் மண்ணெண்ணெய் விளக்குகளாயிருந்தன. பிறகு இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மின்சார விளக்குகள் தென் இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தபோது தமிழ் நாடக மேடைக்கும் இந்த மின்சார விளக்குகளே வந்தன. இஃதன்றி, இடைக்காலத்தில் தமிழ் நாடகங்களில் சில சமயங்களில் பயன்பட்ட மத்தாப்பு வெளிச்சங்களுக்கப் பதிலாக மேடையின் மேல் முக்கியமான காட்சிகள் நடக்கும் போது மின்சாரக் கதிர் விளக்குகள் வந்தன. இவ்வழக்கம் ஆங்கிலக் கம்பெனிகளின் மூலமாகவும், பார்சி கம்பெனிகளின் மூலமாகவும் தமிழ் நாடக சபைகள் கற்றவையாம்.

செ பெ-ll-8