உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

231


பின்னர் சோவியத் அரசாங்கத்தின் அமைப்பின் பேரில் ரஷ்யா சென்று 1931-ல் இந்தியாவுக்கு வந்தார். அவ்வாண்டு டிசம்பரில் இவருடைய எழுபதாம் பிறந்த நாள் நாடெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது ஐன்ஸ்டைன், ராலான், காந்தியடிகள் போன்ற பெரியோர்கள் கருத்தின்மீது டாகுரின் பொற்சுவடி என்ற நூல் வெளியாயிற்று. 1932 ஜனவரியில் காந்தியடிகள் சிறைப்பட்டார் என்று கேட்டதும் ரவீந்திரர் வெகுண்டு ஒரு கவிதை புனைந்தார். கொண்டாட்டங்கள் நிறுத்தப் பெற்றன.

1932-ல் ரவீந்திரர் ஈரான், ஈராக் நாடுகள் சென்று விட்டு வந்ததும் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் ராம்தனு லாகிரி வங்காளிப் பேராசிரியர் ஆனார். பல்கலைக் கழகத்தில் மனிதனுடைய மதம் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

பின்னர் டாக்கா, காசி, ஐதராபாத் ஆகிய பல்கலைக் கழகங்கள் கெளரவப் பெரும்புலவர் பட்டம் வழங்கினார்கள். 1937-ல் ரவீந்திரர் கல்கத்தா பல்கலைக் கழகம் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

1940 ஆகஸ்ட்டுத் திங்கள் 7ஆம் நாள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது சாந்திநிகேதனத்தில் ஒரு சிறப்புப் பட்டமளிப்பு விழா நடத்தி, ரவீந்திரருக்குக் கெளரவ இலக்கியப் பெரும்புலவர் பட்டமளித்தது. இதுவே ஒரு பல்கலைக்கழகம் அயல்நாடு சென்று பட்டம் அளித்த பெருமையுடைடியதாகும்.

1940 செப்டம்பரில் ரவீந்திரர் அதிகமாக நோயுற்றார். 1941 ஆகஸ்ட்டு 7ஆம் நாள் காலமானார். இவருடைய பிரிவு உலக முழுவதையும் மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது. காந்தியடிகள் ரவீந்திரரை மகா காவலர் என்று அழைத்தார்.

டாகுர் நல்ல உயரமான கட்டழகர். கண்களில் ஒளியும் உருக்கமும் நிறைந்தவர். இவருடைய குரல்