பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> - வள்ளல் சீதக்காதி 13. மாகாலம் வந்த மறைப்பொருளைத் தான்விளக்கும் சேகாலி லெவ்வை செழுங்கமலத் தாள்பணிவாம் 14. நல்லோர் பெரியோர்கள் நாயனருள் பெற்றிருந்த எல்லோர் தமையும் இதயத் தனில்நினைவாம். 15. மானபரன் செய்ய வகுதா பதி"க்கிறைவன் தான பரன் பெரிய தம்பி வரபாலன் 16. நன்மை விசயரகு நாதப் பெரிய தம்பி தன்மபரி பாலன் தமிழ்க்காய லாதிபதி 17. பூபன் பெரியதம்பி புத்திரன் செய் தக்காதி சோபன வாழ்த்தும் சுகவாழ்த்தும் வாழ்த்துகிறேன் 18. செங்கமலை மார்பிற் சிறந்தசெய் தக்காதி மங்கள வாழ்த்தும் மணவாழ்த்தும் வாழ்த்துகிறேன் வள்ளல்-சிதக்காதியின்டசிறப்புகள் 19. தேனைத் தகர்த்திடையே திங்கட்கோட் டாலுழக்கி வானைத் தடவும் மணிமரக தக்கிரியான் 20. நிரைகொழிக்கும் முத்தும் நிதியும் திரைக்கரத்தால் கரைகொழிக்கும் செல்வக் கறுப்பாறு காவலவன் 25. மெய்ப்பந் தயமுரைக்கும் மேவார் சிரம்பிடுங்கிக் கைப்பந் தடிக்குங் கரடவெள்ளை யானையினான் 26. மீனைக் கொடிப்புலியை வில்லைவென்று மேவலர்கள் சேனைத் திரள்முறிக்குஞ் சிங்கக் கொடிவேந்தன் 27. தெம்முனைகல் யாணஞ் சிறந்த கொடை யென்றியம்பும் மும்முரசு நின்று முழங்குமணி வாயிலினான் 28. மனந்தனிலுஞ் சொல்லுகின்ற வாய்மையிலும் நித்ரைசெய்யும் அனந்தரிலும் அல்லாவி னானைமற வாதபிரான் ད།༽ "வகுதாபதி - வகுதை நாட்டு கோனகர், கீழக்கரை.