பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி יר 77. பினாட்டு 78. புளி 79. கருப்புக்கட்டி கொட்டான் 20. கொட்டைப்பாக்கு* 27. தேங்காய் | 22. சங்கு i இந்தப் பட்டியலை மேலெழுந்தவாரியாக ஒருமுறை பார்வையிட்டால் பாக்கு, செமர்பு, துத்தநாகம முதலிய பொருட்கள் இந்தத் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்தப் பொருள்களின் வணிகத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தவர்கள் கீழக்கரை மரைக்காயர்கள் என்று குறிப் பிடத் தேவை யில்லை. கீழக் கரைத் துறைமுக க் இயற்கையின் வரப் பிரசாதமாக இலங்கை நாட்டின் எதிர்க்கரையில் அமைந்திருப்பதால் இந்தப்பொரு ள்களை கீழக்கரை முஸ்லி மகள் எளிதாக இலங்கையிலிருந்து கிழக்கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இத்தகைய வாணிபம் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நடந்து வந்துள்ளது. இந்தப் பொருள்களின் வரத்து பெரு வாரியாகவும், தொடர்ச்சியாகவும் இருந்ததால் கிழக்கரையில் கடற்கரையை ஒட்டி சீதக்காதி மரைக்காயருக்கு புதிய பண்டகசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்தப் பொருள்களில் குறிப்பாக சங்குகளை அறுத்து வளைகள், மாலைகள் போன்றவை தயாரிப்பதில் ஈடுபட்டனர். அவர்கள் சங்கு வெட்டிகள் என அழைக்கப்பட்டு அவர்கள் குடியிருப்புப் பகுதியும் சங்கு வெட்டித்தெரு என வழங்கப்படலாயிற்று. இதனைப் போன்றே முத்து, சங்கு குளித்தலில் ஈடுபட்டவர்கள் குடியிருப்பு சங்கு குளிகாரத்தெரு எனவும் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆவணத்தின் படி கிழக்கரையில் இருந்த 6 கப்பல்களில் 8 கப்பல்கள் சீதக்காதி (மரைக்காயருக்கு சொந்தமானவை எனத் தெரிய வருகிறது. ابر