பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ r- பவனிவரும் விதியெல்லார் மகரத் தோரணங்கள்.திப) துபங்கள், நெய்விளக்கு, நிறை குமர்பர், பன்னிர் பொன் ஆலத்தி மணமகனாக வருகின்ற வள்ளலது பவனி பார்க்க மாதரெல்லாம் ஆயத்த மாகின்றனர். பாடகர், பூஞ்சிலம்பு, சூடகம், சுற்றுமணி அணிந்து, பூம்பட்டும் பொற்சுரிகை, தொங்கலும் புனைந்து கொள்கின்றனர். மதன் வாளி பட்டு உடையுமென கச்சு அணிந்து கொள்கின்றனர். வாள் போன்ற தடங்கண்களுக்கு சானை வைத்தது போல மையிட்டுக் கொள்கின்றனர். முத்து ஆரம்பு போன்ற மூக்குத்தியு மர், பொன்மலை போன்ற முத்துவடங்களையும் பூண்டு, காலாழி, கையாழிகளையும் பூட்டிக் கொள்கின்றனர். தங்கச் சவடிகள், பட்டுச்சுரிகை, பூடணர் ரவிக்கை அணிந்து கூந்தல் கோதி சந்தனர் தோய்ந்து, கண்ணாடி பார்த்து பவனி காண மாடத்திலும் மேடையிலும் குழுமி நிற்கின்றனர். மங்கை முதல் பேரிளம்பெண் வரையான பெண்பாலர் அனைவரும் சாளரங்களில் சந்திர உதயமாகக் காணப்படுகின்றனர். ஊர்வலர் வந்துவிட்டது. மாறன் மகட்கு மணவாளனாக மணமகன் வருகிறார். அவரது அழகில் மயங்கிய மாதர்களை புலவர் பார்க்கிறார். அவர்களை நாமும் பார்க்கின்றோர் "மின்னினிடை தள்ளாட வெண்டுகில்போய் நிற்பாரும் வன்னவளை போய்க்கை வளைக்கிரங்கி நிற்பாரும் தாளழகைக் கண்டு தலைநாணி நிற்பாரும் தோளழகைக் கண்டு துடிதுடித்து நிற்பாரும் சீருலவப் பொங்குந் திருவடிவைப் பார்க்க வென்றே காரிகையார் கண்ணைக் கடன்வாங்கிக் கொள்வாரும் மாலைக் குழல்சரிய வச்சிரப்பொற் கொப்பசைய ஒலைக் குழையாடி ஒடிவந்து பார்ப்பாரும் செல்லுலவு செந்தூள் திரளால் தெரியாமல் மெல்ல விழிமேல் விரலடுக்கிப் பார்ப்பாரும் வண்டணுகாச் செவ்வாய் மலரவிழுந் தாமரைபோல் கண்டமட மங்கையர்கள் கண்குளிரப் பார்த்து நிற்பார்