பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
செம்மொழிப் புதையல்
 

பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி
நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ!

குன்றளிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோ
லின்றளிக்குந் தலைவனி யெனலு நினக்கிசையேயோ!

அஃதான்று

ஒயா தொழுகுஞ் சேயாற் றடைகரை
விளங்கு மோத்துர் வியனக ருயர்நிலைப்
பள்ளி மாணவர் கள்ள மின்றி
யாற்றிய தவத்தி னாசிரி யத்தொழில்
ஏற்றவர் தம்மட மாற்று மொண்புலவ!
சிறியேன் தமிழிற் பேரவாக் கொண்டு
சிலரை யண்மி யிலக்கிய விலக்கணஞ்
சிறிது பயின்றுளேன்; செம்மல் நின்றிறங்கேட்
டரியவை யறிவா னார்வமுற் றடைந்தனென்
குலனருள் வாய்ந்த குரவ! எற் கிரங்கி
யொல்காப் பெருமைத் தொல்காப்பியமொ
டேனை யைவகை யிலக்கண நூல்களும்
பல்காப் பியங்களும் பரிந்தனை பயிற்றிப்
பல்கலைக் கழகம் நல்கும் ‘வித்துவான்'
பீடுறு பட்டம் பெறவெற் கருண்மதி
அருளுவை யாயின் பொருளிலாச் சிறியேன்
காலந் தன்னிற் சீல! நீ புரியும்
ஞாலந் தன்னினுஞ் சாலப் பெரிதாம்
நன்றி யிதனை யென்று
மறவா துள்ளி மகிழ்ந்து வாழ்த்துவனே.'

என்னும் பாடலை இயற்றி எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பிள்ளையவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே சிறிய சாய்வு மேசையின் முன் அமர்ந்து ஏதோ குறிப்பெடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். நான் வணக்கம் கூறி முன்னே நின்றேன் அவர் நிமிர்ந்து பார்த்து, இருக்கப் பணித்து, என்னைப்