பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

படும் நிகழ்வுகள் அனைத்தும் பட்டறிவின் வெளிப்

பாடுகளாகவே அமைந்திருப்பது அவற்றின் தனிச் சிறப்பாகும்

அது மட்டுமல்ல, சங்க இலக்கியங்கள் வாயிலாக அன்றைய சமுதாயநிலை எவ்வகைப் போக்குடையதாக அமைந்திருந்தது அன்றைய மக்கள் மனம் எத்தகையதாக இருந்தது, அன்றைய மக்களின் கலையுணர்வு எவ்வகையினவாக இருந்தன, மக்கள் அன்றாட வாழ்வில் அகத்திலும் புறத்திலும் பேணி நடந்த பண்பாட்டு உணர்வுகளும் செயல் பாடுகளும் எத்தகையதாயிருந்தன என்பதை 'உள்ளது உள்ளபடி உணர்த்தும் படைப்புகளாகவே இருந்தன

இதனைச் சங்க இலக்கியப் பாடல்களில் மட்டு மல்லாது, சங்கத்தைத் தொடர்ந்து படைக்கப்பட்ட முதல் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தின் மூலமும் மிகத்தெளிவாக அறிந்துணர்ந்து மகிழலாம்

இளங்கோ ஒன்றிணைத்த தமிழகம்

சேர, சோழ, பாண்டிய மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த அன்றையத் தமிழகம ஒரே மொழி பேசும் தமிழ் இனம் ஒரே இனமாக இருந்தும் மூன்று நாடுகளாகப் பிளவுபட்டு வாழ்வதை அன்றைய மக்கள் விரும்பவில்லை ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலை, பண்பாடு என இருந்தும் மூவேந்தர்களின் போக்கால் மூன்று நாடுகளாகப் பிளவுண்டு, ஒருவரோடொருவர் பகைமை பாராட்டி வாழ வேண்டுமா என்ற நல்லுணர்வு மக்கள் மத்தியில் நிலவி வந்ததை ஒரு காப்பியத்தின்மூலம் வெளிப் படுத்த இளங்கோ விழைந்ததன் விளைவுதான் சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, பாண்டிய நாட்டில்