பக்கம்:செவ்வானம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 11 7 'ஆனால் என் எழுத்துக்களை ரசிப்பதுடன் என் ஆலோசனையைப் பின்பற்றி விட்டதாக நீ சொல்கிறாயே! அது ஆபத்தான விஷயமாயிற்றே!' என்றும் அறிவித்தான். 'ஆபத்து ஒன்றுமில்லை என்ற குமுதம் தனது திட்டத்தைப் பற்றிச் சொன்னாள். அவன் மெளனமாகச் சிரித்தான். ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டாள் அவள். 'வாத்தியாரம்மாளாக வேலை பார்ப்பதைவிட இது நல்லது என்றா நினைக்கிறாய்? என்று வினவினான் அவன். 'நல்லதோ கெட்டதோ, எனக்கு இது பிடித்திருக்கிறது என்ற குமுதம் திடீரென்று நினைத்துக் கொண்டவள்போல் சொன்னாள்: 'பார்க்கப்போனால் எதுதான் முடிந்த லட்சியமாக, மிக மகிழ்வு தருவதாக உள்ளது? வாத்தியாரம்மாக்களில் சில பேர் சினிமா எக்ஸ்ட்ராக்களை லட்சியங்களாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் நடையுடைபாவனையெல்லாம் அதைக்கூறுகிறது. சினிமா எக்ஸ்ட்ராக்கள் பெரிய ஸ்டாருகளை லட்சியமாகக் கருதலாம். பல குல விளக்குகள்கூடசினிமாக்காரிகள் மாதிரி வாழமுடியவில்லையே என்று எண்ணுவது இயல்பாகி விட்டது. எல்லாரும் சினிமா ஸ்டார்களாகிவிட முடியுமா? அல்லது ஆகிவிடுவதுதான் நல்லதா? தாமோதரன் உதடுகளில் சிரிப்பின் ரேகை நெளிந்து மறைந்தது. 'உலகிலே பைத்தியத்தின் ரகங்கள் பலப்பல என்று முனங்கினான். 'அதில் நீங்களும் ஒரு ரகம்தான். ஆனால் அதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள் என்று சிரிப்புடன் கலந்து சொன்னாள் அவள். ‘என்னைப் பற்றிய உண்மைகள் எதையுமே நான் மறப்பதில்லை என்று கூறி அவனும் சிரித்தான். 'ஐயோ, நான் இப்படித் சிரித்துக்கொண்டு நிற்கிறேனே, உங்களுக்கு உதவி செய்யாமல், முதலில்ந்ான் உங்களுக்குச் சுடச்சுட காப்பி கொண்டுவந்துதருகிறேன்.அப்புறம் ரொட்டியோ எதுவோ...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/119&oldid=841327" இலிருந்து மீள்விக்கப்பட்டது