பக்கம்:செவ்வானம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 127 தனிக்கேள்வி. அவர் "கலா மன்றம் தொடங்கியிருப்பது கலையின் பெருமையை எட்டுத் திக்கிலும் பரப்புவதற்காம். இப்படி அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை விளம்பரம் செய்கிற உண்மை வேறு. புன்னைவனத்தின் காரிலே சிவசைலம் துணையிருக்க உல்லாச பவனி போய்வரும் அலங்கார பட்டுப்பூச்சிகளை பகட்டுக்காரிகளை - கவனித்தால் போதும்' இந்தவிதமாகக் கேலிக் குறிப்புகளும் குத்துகிற சுடுசொற்களும் கலந்து, பக்கம் பக்கமாக எழுதியிருந்தான். புத்தகம் வெளியானதும் அவன் எதிர்பார்த்த பரபரப்பு விளையாமற் போகவில்லை. பாராட்டுதல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் குறைவில்லைதான். 24 முதலாளி புன்னைவனம் குமுறினார் தாமோதரனை முதல் தடவையே சரியானபடி கவனித்திருக்கணும். சிவ சைலம்தான் இழுத்தாப்போல இருந்துவிட்டார். அதனாலே அந்தப் பயலுக்கு திமிரு அதிகமாகி விட்டது என்று கொதிப்புற்றார் அவர். இப்பவும் சும்மா விட்டுவிடப் படாது. அவனுக்குப் பாடம் கற்பிக்கத்தான் வேணும் என்று நினைத்தார். சிவசைலம் எதிர்பாராதவேளையிலே வந்தது. அந்தப் புத்தகம் வேறு திசையில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது மண்டையில் விழுந்த பலத்த அடி இது என்றே நம்பினார் அவர். 'முதல் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியதும் அவன் பயந்து போயிருப்பான் என்று நினைத்தேன். அடடா, எத்தகைய முட்டாள் தனம் அது. அப்புறம் அவனையும் அந்தப் பெண்ணையும் பற்றியெல்லாம் பலவிதமான செய்திகள் நம் காதுக்கு எட்டின. அப்பல்லாம் ப்சா, போறான் பொடிப்பயல் என்று விட்டுவிட்டது பெரிய மடத்தனமாக அல்லவா போச்சு' என்று தனக்குத்தானே விமர்சனம் செய்து வருத்தப்பட்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/129&oldid=841338" இலிருந்து மீள்விக்கப்பட்டது