பக்கம்:செவ்வானம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 13? என்று நான்சும்மாயிருந்துவிட்டேன். பள்ளிக்கூடத்தலைவர் உன்மீது அபிமானம் கொண்டு என்னிடம் சொன்னார்.' 'திரும்பவும் அந்தப் பேச்சு எதற்கு? என்று வெடுக்கெனக் கூறினாள் அவள், 'யின்னே எப்படி வாழ்வது என்று. 'நானல்லவா கவலைப்படனும் நீங்க இங்கே இன்று வந்திருப்பதற்கு ஏதோ விசேஷமிருக்கணும் அது என்ன என்கிறதை நேரடியாகச் சொல்லிவிடுங்களேன். எதற்காக சுற்றி வளைத்துப் o o பேசவேண்டும்?" சிவசைலம் தயங்கினார். அவர் வரும்பொழுது நினைத்தது வேறு. குமுதத்திற்கு ஆசை காட்டி, வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அவளைத் தனக்கு சாதகமானவளாக மாற்றிவிடவேண்டும். தாமோதரனுக்கும் அவளுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிய உண்மையை அறிந்து, தாமோதரனை மிரட்டுவதற்கோ அல்லது அவமானப்படுத்துவதற்கோ அதைப் பயன்படுத்திவிடலாம். அவன் ஏதாவது கடிதங்கள் எழுதியிருந்தால் அவற்றை உபயோகிக்கலாம். அவளுக்கு உபதேசித்து, தாமோதரனை நம்பியே நான் கெட்டேன். நல்ல வேலையை விட்டுவந்து, அவனால் துரோகமிழைக்கப்பட்டு, இப்பொழுது தெருத் தெருவாக அலைந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானேன்' என்று பிரசாரம் செய்து, லட்சியம் பேசித் திரிகிற அவன் பேரில் மாசுபடியச் செய்துவிடலாம். இவற்றுக்கெல்லாம் அவள் இணங்கிவிடுவாள். பணமும் புகழும் கிடைக்கக் கூடிய சுகவாழ்வுக்கு வசதி செய்து கொடுக்க முன்வந்தால் அவள் மறுத்துவிடவாபோகிறாள்? - இவ்விதம் நினைத்திருந்தார் அவர், - ஆனால் குமுதம் தான் எதிர்பார்த்த பண்புகள் உடையவள் அல்ல என்று புரிந்து கொள்ள அவருக்கு வெகுநேரம் ஆகவில்லை. தனது எண்ணம் நிறைவேறாமல் போனாலும், வார்த்தைகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/139&oldid=841349" இலிருந்து மீள்விக்கப்பட்டது