பக்கம்:செவ்வானம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் i 39 இறைத்தது. மனதில் பட்டதைச் சொல்லிவிடவேண்டும் என்ற துடிப்பு இருந்தது அவளிடம், அந்த வெறியினால் அவள் இனி என்ன நேரும் என்றே யோசியாமல் பொரிந்து தள்ளிவிட்டாள். உணர்வு மிகுதியினால் அவள் உடலில் சிறு நடுக்கம் பரவியது சிவசைலம் அவளை முறைத்துப் பார்த்தார். கனல் தெறிக்கும் கண்களின் பார்வை குமுதத்தின் உள்ளத்திலே பயம் எழுப்பி விடவில்லை. இவன் சீக்கிரம் தொலையவேண்டும், இங்கிருந்து ஒழிந்தால் சரிதான் என்று பிரார்த்தித் கொண்டிருந்தது அவள் மனம், அவர் மெளனமாக வெளியேறினார். அவரது மெளனமும் அவர் போன வேகமும் இனி உனக்கு நாசகாலம்தான். அதனால்தான் இந்த விபரீத புத்தி ஏற்பட்டிருக்கிறது' என்று சொல்லாமல் இடித்துக் காட்டுவது போல்பட்டன. அவர் போய் மறைந்த பிறகுதான் அவள் மனதிலே பயம் கவிந்தது. அர்த்தமற்ற கலவர உணர்வுகள் அவளது உள்ளத்தில் குடிகொண்டன. தெளிவிலா வேதனை அவளை வாட்டி வருத்தியது. கதவை அடைத்துத் தாழிட்(விட்டுத் தரையில் கிடந்து கண்ணிர் வடித்தாள். உள்ளக்கொதிப்பை, இதயத் துயரை, வாழ்வின் நீக்க முடியாச் சுமையையெல்லாம் அழுது அழுதே கரைத்துவிட விரும்புகிறவள்போல் அழுதுகொண்டிருந்தாள் குமுதம் 27 நரித்தனம் மிகுந்த சிவசைலம் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மகத்தான தோல்விகளில் எல்லாம் மிகப் பெரியது குமுதம் தன்னை அவமானப்படுத்தியதுதான் என்று நம்பினார். தாமோதரனை அடக்க முடியாமல் போனதல்லாம் இந்த நம்பிக்கையின் அஸ்திவாரங்களாக அமைந்திருந்தன அவரது எண்ணத்திலே. 'பிழைக்க வழியற்ற நாய் - வாய்க்கரிசிக்கு வகையற்ற கழுதை அதற்கு எவ்வளவு வாய்க் கொழுப்பு அங்கேயே ரெண்டு அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/141&oldid=841352" இலிருந்து மீள்விக்கப்பட்டது