பக்கம்:செவ்வானம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 செவ்வானம் உங்களுக்கென்ன சிரிப்பாய்த் தானிருக்கும் என் வேதனை எனக்கல்லவா தெரியும் என்று சிணுங்கினாள் அவள. திடீரென்று ஒருசலசலப்பு எழுந்தது. திடுக்கிட்டுத்திரும்பினான் அவன் அவன் கண்கள் இருளில் எங்கும் துழாவின. புலனாகாத வேட்டைப் பொருள் எதையோ தேடி அவள் மனதிலும் கலவரம் எழுந்தது என்ன? என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டாள். ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது.' 'ஏதாவது பிசாசு வந்துவிட்டதோ என்று பார்க்கிறீர்களா? என்றாள். அவள் சிரிக்கும் உணர்ச்சியை இழந்துவிடவில்லை என்பதை மீண்டும் புரிந்துகொண்டான் அவன், 'நீ தான் முன்னாலேயே வந்து நிற்கிறாய். வேறொன்று வரத் துணியுமா என்ன அப்படி வந்தாலும் தன் சகோதரியைத் தேடித்தான் வந்திருக்கவேண்டும்! அவன் பேச்சு அவளுக்கு சிரிப்பு தரவில்லை. சினந்தாள் அவள் இதயபூர்வமாக வருத்தம், மன்னிப்பு என்றெல்லாம் அளந்தவர் பேசுகிற லட்சணம் இதுதான் போலிருக்கிறது என்று. 'அம்மா சகோதரி - உன்னை அம்மா என்றழைப்பதா, சகோதரி என்று கூறுவதா என்று புரியவில்லை. அதனால்தான் இப்படிச் சொல்கிறேன். என்று ஆரம்பித்தான் அவன். 'நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டாம். நான் இங்கேயே இருப்பதனால் தானே நீங்கள் எப்படிப்பேசுவது, என்ன சொல்வது என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது. நான் போகிறேன் என்று எழுந்து வேகமாக இரண்டு எட்டுகள் எடுத்துவைத்தாள் அவள். பின் தயங்கி நின்றாள். 'என்ன, போகவில்லையா? . இருட்டுக்காலமாகயிருக்கிறதே தனியாக எப்படிப்போவது என்று பயமாக இருக்கிறது என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/30&oldid=841393" இலிருந்து மீள்விக்கப்பட்டது