உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சமூக சேவகி

"சாரு! உனக்கு உடம்பு இருக்கிற இலட்சணத்துக்கு நீ எழுந்து வரலாமா...டாக்டர் கையலம்பத் தண்ணீர் கேட்டா, நாங்கள் கொண்டு போய்க் கொடுக்கிறோம்... நீ உடம்பை அலட்டிக் கொள்ளாதே" என்று புத்திகூறிக் கொண்டே, உள்ளே வந்த பர்வதம், "டாக்டர், கோந்தைக்கு எப்படி இருக்கு உடம்புக்கு? பயப்படறமாதிரி ஒண்ணுமில்லையே " என்று கேட்டபடி, பீதி படிந்த டாக்டரின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு என்ன உடம்புக்கு?" என்று கேட்க வேண்டியிருந்தது. டாக்டருக்கு மேலும் சங்கடம் ஏற்படாதபடி சாருவின் பிரவேசம் இருந்தது. தேன்— பால்— பழரசம்... எல்லாம்.. தேவாமிருதம் என்கிறார்களே, அதை அல்லவா சாப்பிடுகிறார் டாக்டர்.

"தாங்க்ஸ்...! நோ...போதும்.. நீங்கள் உட்காருங்கள்... இல்லை இல்லை...படுத்துக் கொள்ளுங்கள்..."

"டாக்டர்! கால்ஷியம் இன்ஜக்ஷன் நல்லதா...

'"ஓயெஸ்! கால்ஷியம் ரொம்ப நல்லது.. நாளைக்குப் போடலாம்..."

"ஒரு கோர்ஸ், எத்தனை இன்ஜக்ஷன்.

"ஆறு போடலாம்... உங்க உடம்புக்கு எட்டுகூட நல்லது..."

“நாளைக்கு அதுதான் செய்து கொள்ளவேணும்...இப்ப சாப்பிட..."

"எது வேணுமானாலும் சாப்பிடலாம்.. கொஞ்சம் கொஞ்சம்..."

"கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடாமல், படிப்படியா சாப்பிடுவேன்? என்னை என்ன பத்ரகாளிபோல எண்ணிண்டு பேசறீள்... என் சினேகிதிகள் என்னை பாரிஸ் ப்யூடின்னு கேலி செய்வா..."

"கேலியா ... செச்சே! பாரிஸில் இப்ப ஏது ப்யூடீஸ்... சரி... உங்களுக்குச சளி ஏன் பிடிச்சது ...."