உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சமூக சேவகி நீண்ட நேரமாகிவிட்டதை பர்வதம் கவனப்படுத்தி யான பிறகு, ஸ்டெதஸ்கோப்பை மறதியாக அங்கேயே வைத்துவிட்டு, டாக்டர் இரகுராமன், தன் நர்சிங் ஹோம் போய்ச் சேர்ந்தார். ஆறாவது இன்ஜக்ஷனுக்குப் பிறகுதான் டாக்டர் ஆரா வமுதன், இது, 'பாரடைபாயிட்'ஜாக்ரதையாகக் கவனித்துக் கொள்ளவேணும் என்று சொன்னார்- சுந்தரம்மாளிடம் டாக்டர் இரகுராமனின் தாயாரிடம்! சாருபாலா வீட்டி லிருந்து வந்ததும் 102! பிறகு ஏறுகிறது இறங்குகிறது; நெருப் பாகக் காய்கிறது; மறுபடி வியர்க்கிறது; மீண்டும் ஏறுகிறது; இப்படி இரகுராமனுக்கு! கடைசியில் இது 'பாரடைபாயிட் என்று டாக்டர் ஆராவமுதம் கூறினார்...நர்சிங் வேளையில் சாருபாலாவுக்குப் பழக்கமில்லை. ஆனால் அந்தப் பதினாறு நாட்களில், அவள் திறமையான 'நர்ஸ்' ஆகிவிட முடிந்தது. காதல் டோஸ் டோஸாகத் தரப்பட்டது- பார்வை, புன் னகை, பேச்சு, நெற்றியில் தைலம் தடவுதல், போர்வையை எடுத்துப் போர்த்துவிடுவது, ஜன்னலை இலேசாகத் திறப் பது, வேளா வேளைக்கு மருந்து தருவது, பிடிவாதமாக வாயைத் திறந்திட மறுத்தால், கன்னத்தைத் தடவி சிரிக்க வைத்து கஞ்சி கொடுப்பது- இப்படி, பாரடைபாயிட், மாதக் கணக்கில் இருக்கக் கூடாதா? இப்படிப்பட்ட மதுர மான வாழ்க்கைக்காகவாவது என்றுகூட டாக்டர் இரகு ராமன் கருதினான். சமூகசேவகி சாருபாலாவுக்குத் தகுந்த வரன் பார்ப்ட தையே முக்கியமான வேலையாகக் கொண்டிருந்த வேதாந் தாச்சாரி, சலியாணமா காதிருந்த ஐ.ஏ.எஸ். அவ்வளவு பேருக்கும் கண்ணி வைத்தபடி இருந்தார்— எல்லாப் பறவை களும் எப்படியோ தப்பிப் பறந்தபடி இருந்தன. சாருபாலா அவரைக் காண நேரிடும்போதெல்லாம் வேடிக்கையாகக் கேலியும் செய்வாள். " "ஏண்டி, சாரு! உனக்கு நேவி'யில் ஒரு ஆளைப் பார்க்க வா... நேவியில்!