உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சொர்க்கத்தில் நாமும் இருக்கிறோமே, மாதர்களாக...அதிலும் தேவமாதர் களாக! பாரிஜாதம் சூடுகிறோம்; பரிமளகந்தம் பூசுகிறோம்; பூலோகத்தாருக்குக் கிட்டாத பட்டாடையும் பல்வேறு அணிகளும் உள்ளன; பூங்கொடி போலாடுகிறோம்; புள்ளி னம் போலப் பாடுகிறோம்; பூம்பொழில்கள் உள்ளன உலவி மகிழ எனினும், உள்ளத்திலே உயர்ந்த எண்ணம் மலர வழி இருக்கிறதா? உலகோருக்கு உயர்நெறி பற்றி எடுத்துக் கூறும் வாய்ப்பு கிடைக்கிறதா? கட்டி முத்தமிடு! தழுவித் தாசனாக்கு! கடைகாட்டு, இடை ஆட்டு! காலில் விழச் செய்! காமக் குழியில் தள்ளு! வெட்டிப் பேசுவான்; எட்டிப் போய்விடாதே! பொறி பறக்கும் அவன் கண்களில், புன் னகை பூத்திடட்டும் இதழில்! கோபப்பார்வை கண்டு அச்சம் கொள்ளாதே! மோகவலை வீசிப் பிடித்திடு! தவம்! தவம்? என்று எண்ணிக் கிடப்பவனை, பெண்களைத் தேடுவதும், நாடுவதும் பாவம் என்று நினைத்துக் கிடப்பவனை மலரடி வருடிடும் நிலைக்குக் கொண்டுவா! வேத ஒலி கிளப்பிக் கொண்டிருப்பானவன், உன் சாகசத்தால், 'மணியே! மானே! மரகதமே! என்று உன்னை அர்ச்சிக்க வேண்டும். அந்த வகை யில் அவனை அடிமையாக்கிவிட வேண்டும். என்ன செய் வாயோ தெரியாது. அவன் ரசனை அறியாத காட்டானாக இருக்கலாம்; அனுபவித்தறியாத அப்பாவியாக இருக்கலாம்; அல்லது ஆடி அலுத்துப் போனவனாக இருக்கலாம்; நீ சிரித் துப் பேசி மயக்குவாயோ, சிந்துபாடி உருக வைப்பாயோ. நாட்டியமாடி வெற்றி கொள்வாயோ, அருகே சென்று ஆரத் தழுவி அதர அமுதளித்து அடிமையாக்குவாயோ, எனக்குத் தெரியாது; அவன் தவக்கோலம் கலைந்திட வேண்டும்- யோக தண்டத்தை வீசி எறிந்துவிட்டு அவன் போக பூமியில் புரள வேண்டும். போ! போ! புனிதன், பூஜ்யன் என்று புக ழப்படுகிறான், அவன், காமுகனாக வேண்டும்- இதைச் சாதிக்க, எத்தகைய முறை தேவையோ அதை உன் யுக்தம் போலக் கையாண்டு வெற்றி பெற்ற பிறகே, இங்கு நீ வருதல் வேண்டும். ஆபத்து வருமோ என்று அஞ்சாதே! சாபம் கொடுப்பானோ என்றெண்ணிச் சஞ்சலப் படாதே. அவ னைப் பாபியாக்கிட உன் பருவ கருவ மிகுந்த அங்கம்.