உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் 129 ணிகர்கள் என்ற கூட்டத்தினரை அனுப்பி தேவர்களின் மகாத்மியத்தைப் பற்றி மனம்போன போக்கில் புளுகித் தள்ளச் சொல்லி இருக்கிறார்கள். முடித்துவிட்டுக் குளறு வது, கிடைத்தவனுடன் கூடிக்குலவுவது, பிறன்மனையாளை கற்பழிப்பது ஆகிய இழிச் செயல்களுக்கெல்லாம் பூலோகத் தில் புராணிகர்கள் தத்துவார்த்தம் கூறி, எல்லாம் மகிமை என்று பேசி மக்களை மயக்குகிறார்கள். தங்கள் லோகத்திலே எவையெவை பஞ்சமா பாதகம் என்று நம்பப்படுகிறதோ, எவைகளைச் செய்ய நாணயமானவர்கள் கூசுகிறார்களோ, எவைகளைச் செய்தால் செய்பவனை இழிமகனென்று கண் டித்து, சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கிறார்களோ, அதே செய்கைகளை இங்கு தேவர்கள் வெறிவேகத்துடன் செய்கி றார்களே என்று வெறுப்படையாமல், கடவுளின் வீலைகள் என்று கூறி கற்பூரம் கொளுத்துகிறார்கள்; கன்னத்தில் அடித்துக் கொள்கிறார்கள்; கர்மம், கர்மம்!'" . . 'அவ்வளவு போதை ஏற்றி வைத்திருக்கிறார்கள் புரா ணக்காரர்கள், "ஆமாமடி! ஒரு நாள் அந்தரத்திலிருந்து ஒரு அரிகதா காலட்சேபத்தைக் கேட்ட போது ஒரு கணம் நானே மயங்கி விட்டேன்.' "புராணக்காரர்களை ஏவி பூலோக வரசிகளை ஏமாற்றிவருகிறார்கள்; புண்யலோக வாசம் கூறி நம்மை எய்க்கிறார்கள்... "நாம் செய்யும் காமச்சேட்டைகளேகூட புண்ய கைங் கனியம் என்றுதானே கூறுகிறார்கள். வேறு எப்படிக் கூறு வார்கள்? நாம்தான் பார்க்கிறோமே இங்கு மூலவர் என்று கொண்டாடப்படுபவர்களே ஒழுக்கத்தைப் பற்றி ஒரு துளி யும் சிந்திக்கவும், மதிக்கவும் மறுக்கிறார்கள்—அப்பப்பா! மகாவிஷ்ணு செய்திருக்கிற ஆபாசங்கள் கொஞ்சமா ...' " "பாவமடி, இந்த நாரதர் ! விஷ்ணுவிடம் சிக்கிக் கொண்டு பட்டபாடு பற்றி எண்ணினாலே சிரிப்புவருகிறது' பூ-157-செ-5