பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல். சரோஜா ஆறணா! . என்னைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்தச் மனப்பிராந்தியல்ல, என் செவியிலே தெளிவாக விழுந்தது அப்பேச்சு. என் மூச்சே திணறிவிட்டது. என்னை நிலை குலைய வைத்த அந்தச் சொல்லுரைத்தவரோ, நெற்றியிலே நீறு பூசி, வெள்ளை ஆடை அணிந்து, விளங் கினார். போக்கிரியல்ல, போக்கற்றவருமல்ல, புத்திதடுமாறி யவருமல்ல, அவர் தான் சொன்னார் சரோஜா ஆறணா என்ற சொல்லை. என்ன என்ன? என்று கேட்கவோ என்நா எழ வில்லை. தமக்கென்ன என்றிருக்கவோ மனம் இடந்தா வில்லை. நடுவீதி கின்றேன், வண்டியோட்டிகளுக்கு அது பெருந்தொல்லை, என் நிலை காண அந்த ஆசாமிக்குக் கண்ணா இல்லை? புன்முறுவல் செய்தார். அருகில் சென்றேன். சரோஜா ஆறணா! என்ன அநியாயம், என்ன அக்ரமம் பட்டப் பகலில், பலர் கூடும் கடைவீ சியில், சரோஜா, ஆறணா என்று ஏலங்கூறும் அளவுக்கா நாடு கெட்டுவிட் டது, நாகரிகம் பட்டுவிட்டது, என்று நினைத்தேன்,பதறி னேன், பெண் விற்பதா! வீதியில்! அந்த விலைக்கா!! ஆறணா வுக்கா அந்தச் சரோஜினி? என்னால் ஆத்திரத்தை அடக்க