போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார். அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளுநோவுன்னு படுத்தாரு, பக்கக்கிலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள். மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு" என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு "உன் சம்சாரம் சொல்வதுபோலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க" என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கவேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
30